இன்றைய கால கட்டத்தில், பலர் டயட் குறித்து அதிகம் சிந்திக்கின்றனர். ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் கொடுப்பவர்கள் மத்தியில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கம் உள்ளது. உடல் பருமனை குறைத்தல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், மூளையின் ஆற்றலை மேம்படுத்துதம் போன்ற அற்புதமான பண்புகள் கொண்டுள்ள கிரீன் டீ குடிக்கும் பழக்கம் நல்லது தான்.
கிரீன் டீ நன்மைகள் அனைவருக்கும் தெரியும் என்றாலும், அதன் துவர்ப்பு சுவை காரணமாக, பெரும்பாலானோர் அதனை சாப்பிட தயங்குகிறார்கள். ஆரோக்கியமாக இருக்க, குறிப்பாக உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் பருமனை குறைக்க க்ரீன் டீ குடிக்க விரும்பினால், அதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள 3 பொருட்களில் ஏதேனும் ஒன்றை கலந்து குடிக்கவும். இது கிரீன் டீயின் சுவையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், கிரீன் டீயின் ஆரோக்கிய நன்மைகளையும் இரட்டிப்பாக்கும்.
கிரீன் டீயில் எலுமிச்சை கலந்து குடிக்கலாம்
கிரீன் டீயின் சுவையை மேம்படுத்த பலர் எலுமிச்சை சாற்றை சேர்க்கிறார்கள். இது சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். எலுமிச்சை சாறு கிரீன் டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற தன்மையை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற்று, தொற்றுநோய்க்கான ஆபத்தும் குறைகிறது. மேலும் விரைவாக உடல் எடையை (Weight Loss Tips) குறைக்க உதவுகிறது.
கிரீன் டீயில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கலாம்
ஆப்பிள் சைடர் வினிகர் சற்று புளிப்பு-இனிப்பு கலந்த சுவையைக் கொண்டது. இதனை க்ரீன் டீயுடன் கலந்து பருகுவது, கிரீன் டீயின் துவர்ப்பு தன்மையை குறைக்க உதவுகிறது. ஒரு கப் க்ரீன் டீயில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து குடிக்கவும். இது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வெயிட் லாஸ் முயற்சியையும் எளிதாக்குகிறது.பெரும்பாலானோர் எடை இழப்புக்காக ஆப்பிள் சைடர் வினிகரை குடிக்கும் வழக்கம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் படிக்க | உடல் பருமனை உடனே குறைக்க உதவும் காலை பழக்கங்கள்: 10 நாட்களில் ஒல்லியாகலாம்
கிரீன் டீயில் சிவப்பு திராட்சையை கலந்து குடிக்கலாம்
சிவப்பு திராட்சை சந்தையில் எளிதில் கிடைக்கும். கிரீன் டீ தயாரிக்கும் போது, ஒரு திராட்சையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் கிரீன் டீ சேர்க்கவும். இது தண்ணீரில் திராட்சையின் இனிப்பு மற்றும் சுவையைக் கரைந்திருப்பதால், கிரீன் டீயின் துவர்ப்புத்தன்மையையும் குறைக்கும். இது தவிர, கிரீன் டீயில் இதனை கலப்பது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
பல சுவைகள் கொண்ட க்ரீன் டீ சந்தையில் கிடைத்தாலும், இயற்கையாக தயாரிக்கப்படும் க்ரீன் டீ ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். என்பதை கவனத்தில் கொள்ளவும். கிரீன் டீ உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்றாலும், அதனை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடாது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வலுவான பாலிபினால்கள் நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றீல் குடிக்கும் போதும் வயிற்றில் அமில உற்பத்தி அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் செரிமான அமைப்பை சீர்குலைத்து, ஆசிடிட்டி, வீக்கம், வாயுப் பிரச்சனை போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நாள் ஒன்றுக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்கலாம்?
கிரீன் டீயை அதிகமாக குடிக்க கூடாது என்கின்றனர் நிபுணர்கள். ஒரு நாளைக்கு 1-2 கப் க்ரீன் டீ குடிப்பது நல்லது. அதிகப்படியான கிரீன் டீ கல்லீரலை சேதப்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று கோப்பைகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. மேலும், சாப்பிட்ட உடனேயே க்ரீன் டீயைக் குடிக்காதீர்கள். இது அமிலத்தன்மை, வீக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் உணவுக்கு 30-45 நிமிடங்களுக்கு பின் கிரீன் டீ அருந்துவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வாழைக்காயின் வியக்க வைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: முழு லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ