ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும்

Weight Loss Tips: சில எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அந்த வழிகளில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 8, 2024, 10:00 AM IST
  • இலவங்கப்பட்டை தண்ணீர் பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்ற உதவும்.
  • இலவங்கப்பட்டை பொடியை தினமும் காபி அல்லது தேநீரிலும் கலந்து குடிக்கலாம்.
  • இது எடை இழப்புக்கு மிகவும் நல்லது.
ஓவர் எடையை ஈசியா குறைக்க இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் போதும் title=

Weight Loss Tips: உடல் பருமன் இந்த நாட்களில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக தொப்பை கொழுப்பு (Belly Fat) அதிகமாகி உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. இதனை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே பார்க்கப்படுகின்றது. 

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடினமான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும் சில எளிய, இயற்கையான வழிகளில் உடல் எடையை குறைக்கலாம். அந்த வழிகளில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை.

இலவங்கப்பட்டையை நமது இந்திய சமையலறைகளில் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். பல வித உணவு வகைகளில் இதை நாம் உபயோகிக்கிறோம். இது உணவின் சுவையை கூட்டுவதோடு, இதனால் பல வித ஆரோக்கிய நன்மைகளும் உடலுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க இது பெரிய அளவில் உதவுகின்றது.

உடல் எடையை குறைக்க உதவும் இலவங்கப்பட்டை

- இலவங்கப்பட்டை தண்ணீர் பிடிவாதமான தொப்பை கொழுப்பை அகற்ற உதவும். 
- இலவங்கப்பட்டை பொடியை தினமும் காபி அல்லது தேநீரிலும் கலந்து குடிக்கலாம். 
- இது எடை இழப்புக்கு மிகவும் நல்லது. 
- தினமும் காலையில் இலவங்கப்பட்டை நீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகின்றது.
- இரவு உணவிற்கு பிறகு இலவங்கப்பட்டை நீர் குடிப்பதால் நாள் முழுவதும் உடலில் சேர்ந்த கலோரிகளை வேகமாக எரிக்க உதவி கிடைக்கும்.

பாலுடன் இலவங்கப்பட்டை

பலவீனமான குழந்தைகள் பெரும்பாலும் பால் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள், பால் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால் எடையை அதிகரிக்கும் பால், இலவங்கப்பட்டையுடன் சேர்ந்தால், எடை இழப்புக்கு ஒரு சிறந்த தீர்வாக மாறும் என்பது பலருக்குத் தெரியாது. தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு கிளாஸ் பாலில் இலவங்கப்பட்டை பொடியை கலந்து குடித்து வந்தால், தொப்பை கொழுப்பு கரைந்து உடல் எடை சீராக குறையத் தொடங்கும். 

மேலும் படிக்க | மூட்டு வலியை போக்கும் பிரியாணி இலை கஷாயம், யூரிக் அமில பிரச்சனையை தீர்க்கும் அருமருந்து

இலவங்கப்பட்டையின் பிற நன்மைகள்

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

இலவங்கப்பட்டை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பராமரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதை தினமும் உட்கொண்டால், நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

இலவங்கப்பட்டையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் உள்ள நச்சிகளை நீக்கி உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகின்றது.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

இலவங்கப்பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆண்டிஆக்சிடெண்டுகள், மன அழுத்தம் மற்றும் கவலை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை அனைத்தும் இணைந்து வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகமாக வைத்திருக்கவும். இவை எடை அதிகரிப்பதையும் தடுக்க உதவும்.

நார்ச்சத்து

இலவங்கப்பட்டையில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது உடலுக்கு நீண்ட நேரத்திற்கு நிறைவான உணர்வை அளிக்கின்றது. இதுவும் எடை இழப்பில் உதவுகின்றது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | கல்லீரல் முதல் இதயம் வரை எல்லாம் பக்காவாக இருக்க... பப்பாளி விதையை இப்படி யூஸ் பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News