Spine Health: முதுகெலும்பை வலுவாக்கும் ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்!

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, முதுகெலும்பு பலவீனமடைவது பொதுவான உடல் பிரச்சனையாக மாறி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2022, 08:06 PM IST
  • முதுகுத்தண்டு எலும்புகள் வலுவாக்கும் உணவுகள்.
  • உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியவை.
  • பச்சை காய்கறிகள் மிக முக்கியமானவை.
Spine Health: முதுகெலும்பை வலுவாக்கும் ‘இந்த’ உணவுகளை அவசியம் சேர்க்கவும்! title=

தற்போதைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, முதுகெலும்பு பலவீனமடைவது பொதுவான உடல் பிரச்சனையாக மாறி வருகிறது. அதனால் தான் நாம்  உண்ணும் உணவு மற்றும் பானங்களில் மிகவும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. 

அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் உங்கள் முதுகெலும்பை பலப்படுத்தும் விஷயங்களை சேர்த்துக் கொள்வது அவசியமாகிறது. முதுகுத்தண்டை பலப்படுத்தும் எந்தெந்த பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் அனைத்து வகை மூட்டுகளை வலுப்படுக்கிறது என்றாலும், நமது உடலின் முதுகெலும்பை வலுப்படுத்துவதில் இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பச்சைக் கீரையை தினமும் சாப்பிடலாம். எலும்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் பச்சை இலைக் காய்கறிகளில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

மேலும் படிக்க | Neeri-KFT சிறுநீரக நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகுமா; மருத்துவர் கூறுவது என்ன..!!

ஆரஞ்சு நிற காய்கறிகள்

ஆரஞ்சு காய்கறிகளை சாப்பிடுவதும் முதுகெலும்பை வலுப்படுத்தும். கேரட், பரங்கிக்காய் போன்ற சாப்பிடுவதால் ஆரஞ்சு நிற காய்கறிகளால், முதுகுத்தண்டும் வலுவடைகிறது. கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, போன்றவற்றையும்  சாப்பிடலாம்.

உணவில் நட்ஸ் வகைகள்

இதனுடன் பாதாம், வால்நட்ஸ் போன்ற நட்ஸ் சாப்பிட்டு வர முதுகெலும்பு வலுப்பெறும். உண்மையில், பாதாம் கால்சியம் மற்றும் வைட்டமின்-ஈ ஆகியவற்றின் நல்ல மூலமாகும். மற்ற கொட்டைகளை விட அக்ரூட் பருப்பில் அதிக ஒமேகா-3 இருப்பதாக நம்பப்படுகிறது. இவற்றை சாப்பிடுவதால் உடலில் வீக்கம் ஏற்படாது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News