Health Tips: இந்த 5 உணவுகளை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது!

ஹெல்த் நியூஸ்:  நமது உடலுக்கு எந்த உணவுகள் ஆரோக்கியமானவை, எது ஆரோக்கியமற்றது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 14, 2022, 02:53 PM IST
  • நவீன உணவில் சர்க்கரை பானங்கள் மிக மோசமான உணவு பொருட்களில் ஒன்றாகும்.
  • பழச்சாறு பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
  • உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள்.
Health Tips: இந்த 5 உணவுகளை தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது! title=

ஹெல்த் நியூஸ்: நாம் தினமும் சாப்பிடும் உணவைப் பொருத்தமட்டில் எப்போதும் கட்டுப்பாடுடன் இருப்பதே நமது உடலுக்கும், மனத்திற்கும் நல்ல பலனைத் தரும். நமது உடலுக்கு எந்த உணவுகள் ஆரோக்கியமானவை, எது ஆரோக்கியமற்றது என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது மிக மிக முக்கியமானது. ஒருவர் தனது உடல் எடையை குறைக்க (Lose Weight Without Dieting) விரும்பினாலும் சரி, அதேபோல நோய், உடல் உபாதைகளில் இருந்து தூரமாக இருக்க வேண்டும் என்றாலும் சரி, குறிப்பிட்ட சில  உணவுகளை தவிர்க்க (Avoided Some foods) வேண்டும். 

நாம் தோ்ந்தெடுக்கும் உணவு தான் நமது உடலின் ஆரோக்கியத்தை தீா்மானிக்கும். இந்த பதிவில் சில ஆரோக்கியமற்ற (Unhealthy Foods) மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப்பற்றி காணலாம்.  

இங்கு ஆரோக்கியமற்ற ஐந்து உணவுகள் பற்றி குறிப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தங்கள் உடல்நலத்திற்கு எந்தவித சேதமும் ஏற்படாதவாறு சில சந்தர்ப்பங்களில் அவற்றை மிதமாக சாப்பிடலாம். ஆனால் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

ALSO READ | Omicron வந்தால் வரும் முதல் அறிகுறி இதுதான்: நிபுணர்களின் எச்சரிக்கை

சர்க்கரை பானங்கள் (Sugary Drinks)

நவீன உணவில் சர்க்கரை பானங்கள் மிக மோசமான உணவு பொருட்களில் ஒன்றாகும். இருப்பினும், உடலுக்கு சர்க்கரை முக்கியமானது என்றாலும், குறிப்பாக சர்க்கரை பானங்கள் தீங்கு விளைவிக்கும். நீங்கள் திரவமாக கலோரிகளை குடிக்கும்போது, உங்கள் மொத்த கலோரி அளவு அதிகரிக்கும். 

சர்க்கரை பானங்கள் அதிக கொழுப்பு (Fat) நிறைந்த பொருளாகும். மேலும் அவற்றை அதிக அளவில் குடிப்பதால் கொழுப்பு அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படலாம்.

சர்க்கரை அதிக அளவில் உட்கொள்ளும்போது, நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு தீவிர நோய்க்கு அது வழிவக்கும். 

மாற்று உணவு:

அதற்கு பதிலாக தண்ணீர், சோடா நீர், காபி அல்லது தேநீர் குடிக்கவும். எலுமிச்சை துண்டுகளை தண்ணீர் அல்லது சோடா நீரில் சேர்ப்பது சுவையை அதிகரிக்க செய்யும் மற்றும் உடலுக்கும் நல்லது. 

ALSO READ | Healthy fruit: குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய பழங்கள் இவை

பீட்சா (Pizzas)
உலகின் மிகவும் பிரபலமான ஜங் புட்களில் ஒன்று பீட்சா (Pizza). பெரும்பாலான வணிக பீட்சாக்கள் ஆரோக்கியமற்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிக சுத்திகரிக்கப்பட்ட மாவு மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட இறைச்சி இருக்கும். பீட்சாவில் கலோரிகள் மிக அதிகமாக இருக்கும்.

மாற்று உணவு:
சில உணவகங்கள் ஆரோக்கியமான பீட்சாக்களை வழங்குகின்றன. உங்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கும் வரை, வீட்டில் தயாரிக்கப்பட்ட பீட்சாக்களும் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிகமான பழச்சாறுகள் (Fruit Juices)

பழச்சாறு பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. பழச்சாற்றில் சில ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. இது அதிக அளவு திரவ சர்க்கரையை உடலுக்குள் செலுத்துகிறது. 

உண்மையில், பழச்சாறு கோக் அல்லது பெப்சி போன்ற சர்க்கரைப் பானங்களைப் போலவே சர்க்கரையின் அளவு அதிகமாக கொண்டுள்ளது. சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். கவனமாக இருக்கவும்.

மாற்று உணவு:

சில பழச்சாறுகளில் சர்க்கரையில் அளவு குறைவாக இருக்கிறது. அதன் பழச்சாறுகள் சாப்பிடலாம். மாதுளை மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும் உடலுக்கு நன்மை அளிப்பவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன. ஒரே நாளில் அதிகப்படியான பழச்சாறுகள் அருந்தக்கூடாது.

ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!! 

பிரெஞ்சு பிரைஸ் (French Fries) - உருளைக்கிழங்கு சிப்ஸ் 

வேகவைக்கப்பட்ட முழு வெள்ளை உருளைக்கிழங்கு மிகவும் ஆரோக்கியமானது. இருப்பினும், பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Potato Chips) உடலுக்கு ஆரோக்கியமானது அல்ல. இந்த உணவுகளில் கலோரிகள் மிக அதிகமாக உள்ளன. பல ஆய்வுகள் மூலம் பிரெஞ்சு பிரைஸ் மற்றும் உருளைக்கிழங்கு சிப்ஸ் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. 

இந்த உணவுகளில் அதிக அளவு அக்ரிலாமைடுகளும் இருக்கலாம். எனவே புற்றுநோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாற்று உணவு:

உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து சாப்பிடுங்கள். உருளைக்கிழங்கு சிப்ஸ்-க்கு பதிலாக கேரட் சாப்பிடலாம். அதிகமாக விருப்பம் இருந்தால், குறைந்த அளவு சாப்பிடலாம். ஆனால் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள்:

ஆரோக்கியமான உணவை உட்கொள்வதற்கும் எடை குறைப்பதற்கும் எளிய வழி, பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது. பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பெரும்பாலும் தொகுக்கப்பட்டு அதிகப்படியான உப்பு அல்லது சர்க்கரை கலக்கப்படுகிறது.

மாற்று உணவு:

வீட்டிலேயே சமைத்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏராளமான காய்கறிகளையும் பிற உணவுகளும் உங்கள் வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக சமைத்து சாப்பிடுங்கள். 

ALSO READ | விரைவாக உடல் எடை அதிகரிக்க வேண்டுமா? உங்களுக்கான டையட் டிப்ஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News