சப்போட்டா பழம் சாப்பிடும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்

Health Benefits Of Sapota: சப்போட்டா பழத்தில் சோடியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 6, 2022, 06:30 PM IST
  • சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
  • ரத்த அழுத்த பிரச்சனையில் தீர்வு கிடைக்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சப்போட்டா பழம் சாப்பிடும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும் title=

Sapota Health Benefits: சப்போட்டா மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருக்கும் நேரத்தில் இந்தப் பழத்தை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். 

தமிழகத்தில் பொதுவாக நாம், இந்த பழத்தை சப்போட்டா என்று கூறுவோம். ஆனால் மற்ற மாநிலங்களில் குறிப்பாக வடா மாநிலங்களில் "சிக்கூ" என்று சொன்னால் தான் தெரியும். இந்தியாவில், சப்போட்டா பழத்தை பொதுவாக "சிக்கூ” என்றே பலர் குறிப்பிடுகிறார்கள். 

சப்போட்டா மாம்பழத்தைப் போலவே கலோரிகள் நிறைந்த பழமாகும். சப்போட்டா ஒரு சுவையான வெப்பமண்டல பழமாகும். இந்தியாவிலேயே அதிக சப்போட்டாவை கர்நாடகா உற்பத்தி செய்கிறது,. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களிலும் இது உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் சாப்பிடும் பழங்களின் நன்மைகள் பற்றி நமக்கு மிகக் குறைவாகவே தெரிந்து வைத்திருக்கிறோம். சப்போட்டாவில் அளவில்லா ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆயுர்வேதத்தின் படி, இந்த பழம் பல நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும். சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

சப்போட்டா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன

1. ரத்த அழுத்த பிரச்சனையில் தீர்வு 

சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் ரத்த அழுத்த பிரச்சனையில் தீர்வு காணலாம். இந்த பழத்தில் பொட்டாசியம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சப்போட்டா சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கிறது. ஒருவருக்கு சிறுநீரக கல் இருந்தால், சப்போட்டா சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும் படிக்க | Weight loss By Walnuts: உடல் எடையை குறைக்க வால்நட்

2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

சப்போட்டாவில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. சப்போட்டாவில் காணப்படும் பாலிபினால்கள் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை எதிர்த்துப் போராடவும், நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாக்கிறது.

3. சளியை நீக்குவதில் பயனுள்ளதாக இருக்கும்

சளியை நீக்குவதில் சப்போட்டா உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் சப்போட்டாவில் காணப்படுகின்றன. இது பல சளி பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்கும். 

4. சருமம் மற்றும் கூந்தலுக்கு நல்லது

சப்போட்டா ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்திற்கு ஒரு சிறந்த பழமாகும். ஏனெனில் இதில் பல்வேறு வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் உள்ளன. சப்போட்டாவில் உள்ள விதை மூலம் தயாரிக்கப்படும் எண்ணெய் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும். 

5. இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கும்

உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால், எரிச்சல் மற்றும் கவனமின்மை ஆகியவற்றை சந்திக்க நேரிடும். மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்புச்சத்து சப்போட்டாவில் காணப்படுகிறது.

சப்போட்டா அதிகம் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

சப்போட்டாவை அதிகமாக உட்கொண்டாலோ அல்லது சரியாக பழுக்காத நிலையில் பச்சையாக சாப்பிட்டாலோ தொண்டையில் அரிப்பு அல்லது வாயில் புண் ஏற்படலாம். பச்சையான சப்போட்டாவை உட்கொள்வது அஜீரணம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

யாரெல்லாம் சப்போட்டா பழத்தை சாப்பிடக்கூடாது

ஒருவருக்கு நீரிழிவு பிரச்சனை இருந்தால், சப்போட்டா சாப்பிடும் முன் கண்டிப்பாக மருத்துவரை அணுகவும். ஏனெனில் இதனை உட்கொள்வதால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

சப்போட்டா பழத்தை எவ்வாறு சாப்பிடலாம்?

- சப்போட்டாவை ஹல்வா செய்து சாப்பிடலாம்.

- சிலர் சப்போட்டாவை இனிப்பு சாஸ் வடிவில் சாப்பிடுகிறார்கள்.

- சப்போட்டாவை ஷேக்காக சாப்பிடலாம்.

- சப்போட்டாவை தோலுடன் சாப்பிடலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இப்படி குளிச்சி பாருங்க: பல பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News