21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்

No Sugar Challenge: அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 10, 2024, 06:40 PM IST
  • 21 நாட்களுக்கு சர்க்கரையை சேர்க்காமல் அதாவது நோ சுகர் சவாலை ஏற்க நீங்கள் தயாரா?
  • இதைக் கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் இதை எளிதாக செய்து முடிக்க முடியும்.
  • இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி புரிந்து கொண்டால் அனைவருமே இதை செய்து பார்க்க விரும்புவார்கள்.
21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள் title=

No Sugar Challenge: நம்மில் பலர் இனிப்பு வகைகளை விரும்பி உட்கொள்கிறோம். இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனினும் சிலர் மிக அதிகமாக இதை உட்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள், சிலர் குறைந்த அளவில் சாப்பிடுகிறார்கள். நேரடியாக இனிப்புகளை உட்கொள்வதுடன் நாம் உட்கொள்ளும் பானங்களிலும் சர்க்கரையை கலந்து நாம் சாப்பிடுகிறோம். இவை தவிர குளிர் பானங்கள் மற்றும் பிற உணவு வகைகளிலும் சர்க்கரை கலக்கப்படுகிறது. 

ஆனால் அதிக சுவையாக இருக்கும் இனிப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் நீரிழிவு நோய் போன்ற நோய்களும் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. பல மருத்துவர்கள் இனிப்பை குறைவாக உட்கொள்ள பரிந்துரைப்பதற்கு இதுவே காரணம்.

இனிப்பை நிறுத்துவது முடியாத ஒன்று என சிலர் நினைக்கிறார்கள். ஆனால், சிறிது சிறிதாக இதை செய்ய முயற்சிக்கலாம். தொடர்ந்து 21 நாட்களுக்கு ஒரு விஷயத்தை நாம் செய்தால் அது நமக்கு பழகிவிடும் என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் 21 நாட்களுக்கு சர்க்கரை அல்லது சர்க்கரை கலந்த பொருட்களை உட்கொள்ளாமல் இருந்தால் இனிப்பை குறைவாக உண்ணும் பழக்கமும் நமக்கு பழகிவிடும். இது மட்டுமல்லாமல் 21 நாட்களுக்கு தொடர்ந்து சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் இருந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

21 நாட்களுக்கு சர்க்கரையை சேர்க்காமல் அதாவது நோ சுகர் சவாலை ஏற்க நீங்கள் தயாரா? இதைக் கேட்பதற்கு கடினமாக இருந்தாலும் இதை எளிதாக செய்து முடிக்க முடியும். இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி புரிந்து கொண்டால் அனைவருமே இதை செய்து பார்க்க விரும்புவார்கள். 21 நாட்களுக்கான நோ சுகர் சேலஞ்ச் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே காணலாம்.

எடை இழப்பு

21 நாட்களுக்கு சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருந்தால் உடல் எடை கணிசமாக குறையும் (Weight Loss) என்று கூறப்படுகிறது. இதனால் தொப்பை கொழுப்பும் (Belly Fat) குறையத் தொடங்கும். இனிப்பு வகைகளில் கலோரிகள் அதிகமாக உள்ளன. இவை உடல் பருமனுக்கு காரணமாகின்றன.

மாரடைப்பு

இனிப்புகளை சாப்பிடாமல் இருக்கும் பொழுது மாரடைப்பு (Heart Attack) ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது. அதிக இனிப்புகளை உட்கொள்வதால் ட்ரைகிளிசரைடுகளின் அளவு அதிகமாகிறது. இது உடலில் உள்ள இரத்தம் உறைவதற்கு காரணமாகிறது. இதன் காரணமாக மாரடைப்பு ஏற்படலாம்.

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்தத்தின் அரிதான அறிகுறிகள் இவைதான்: உன்னிப்பா கனவிங்க!!

சரும பாதுகாப்பு

இனிப்பு உணவுகளை உட்கொள்ளாமல் இருக்கும் பொழுது சருமம் ஆரோக்கியமாகவும் (Skin Care) பளபளப்பாகவும் மாறுகிறது. அதிக இனிப்புகளை சாப்பிடும் போது நம் உடலில் உள்ள கொல்லோஜன் புரதங்களுடன் ஒட்டிக் கொள்கிறது. படிப்படியாக குலோஜன் அழியத் தொடங்குகிறது. குலோஜன் குறைவதால் முகத்தில் உள்ள பொலிவு இழக்கப்படுகிறது. இதன் காரணமாக முகத்தில் சுருக்கம் மற்றும் மறுக்கள் ஏற்படுகின்றன.

பற்களின் பாதுகாப்பு

21 நாட்களுக்கு இனிப்பு சாப்பிடாமல் இருந்தால் பற்களின் வலிமை (Dental Care) அதிகரிக்கும். நாம் இனிப்பு உணவுகளை உட்கொள்ளும் பொழுது வாயில் இருக்கும் பாக்டீரியாக்கள் இனிப்புடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த அமிலம் சொத்தைக்கு வழி வகுக்கின்றது. இதனால் பற்களில் துளைகள் அல்லது துவாரங்கள் ஏற்படுகின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வேகமாக தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News