முளைகட்டிய தானியங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு செய்யும் நன்மைகள் ஏராளம். முளை கட்டுவதால் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து அளவு இரட்டிப்பாகிறது என்பதோடு எளிதில் ஜீரணமாகும் தன்மையையும் பெறுகிறது என்பது கூடுதல் சிறப்பு. முளை கட்டிய தானியங்கள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது முளை கட்டிய பாசிப்பயறு, முளை கட்டி கொண்டைக் கடலை ஆகியவை. முளை கட்டிய வெந்தயம் பற்றி அதிகம் பேருக்கு தெரியாத நிலை உள்ளது
நீரிழிவும் முளை கட்டிய தானியங்களும்
வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடுவதை விட, முளை கட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது. ஆயுர்வேதத்தில் மூலிகையாக பயன்படுத்தப்படும் வெந்தயத்தை முளை கட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.
இன்சுலின் சுரப்பை தூண்டும் முளை கட்டிய வெந்தயம்
நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். இல்லை என்றால், சிறுநீரகம் , கண்கள், இதயம் என முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். முளை கட்டிய வெந்தயம் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் என்பதால்,இதனை தினசரி சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் வெந்தயம்
முளை கட்டிய தானியங்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது. இது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படும். இதய நோய் அபாயம் குறையும். அதோடு தமனிகளில் சேரும் கெட்ட கொழுப்பையும் எரிக்கிறது.
மேலும் படிக்க | டெங்கு நோயாளிகளுக்கு பிளேட்லட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் சிறந்த பழங்கள்
கண்பார்வையை கூர்மைக்க உதவும் வெந்தயம்
முளை கட்டிய தானியத்தில், நார்ச்சத்து மற்றும் புரத சத்தோடு வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. உங்கள் கண்பார்வையை கூர்மையாக்க வைட்டமின் ஏ அவசியம். முளை கட்டிய வெந்தயத்தில் ஆக்ஸிஜனேற்றிகளும் நிறைந்துள்ளதால் கண்களின் செல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது.
மாதவிடாய் வலி, பிசிஓடி பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் வெந்தயம்
மாதவிடாய் வலியால் அவதிப்படும் பெண்கள், முளை கட்டிய வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவதால் நிவாரணம் கிடைக்கும். வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்வதை விட இதனை சாப்பிடுவதால் பக்க விளைவுகளை தவிர்க்கலாம். அதோடு ஹார்மோன் சமநிலையை சீராக்கும் ஆற்றலும் வெந்தய விதைக்கு உண்டு. இதனால் பிசிஓடி பிரச்சனையும் நீங்கும்.
இரத்த சோகையை போக்கும் முளை கட்டிய வெந்தயம்
முளை கட்டிய தானியங்களை உட்கொள்வதால் உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதால், ரத்த சோகை நீங்கும். உடலின் இரத்த ஓட்டத்தை அதிகமாவதால், உறுப்புகள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடவதை எளிதாக்குகிறது.
ஆண்களின் பாலியல் பிரச்சனைக்கு தீர்வைத் தரும் முளை கட்டிய வெந்தயம்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், வெந்தயத்தின் சாற்றை குடிப்பதால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. வெந்தயத்தை 6 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆண்கள் தினமும் முளை கட்டிய வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது பலனளிக்கும்.
முளை கட்டிய தானியங்களை சாப்பிடும் சரியான முறை
முளை கட்டிய தானியங்கள் ஊட்டச்சத்தின் ஆதாரம். ஆனால், காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. தானியங்களை தண்ணீரில் ஊறவைத்து முளைகட்டும் போது, அவற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, அதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக இருக்கும். எனவே, அசிடிட்டி போன்ற செரிமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, காலையில் வெறும் வயிற்றி முளைகட்டிய தானியங்களை சாப்பிடுவதாக இருந்தால், அவற்றை வேக வைத்துச் சாப்பிடுவது நல்லது. இதனால் செரிமானம் எளிதாகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | நரம்பு மண்டலத்தை பாதிக்கும் வைட்டமின் B12 குறைபாடு... அறிகுறிகளும்... உணவுகளும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ