உலகம் முழுவதும் டீ குடிக்க விருப்பாதவர் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவு. இந்தியாவில் டீயுடன் அன்றைய நாளை தொடங்கும் பல குடும்பங்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட அளவு தேநீர் உடலுக்கு பல நன்மைகளைத் தரும்.என்றும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது, ஆனால் இப்போதெல்லாம் கலப்படம் மற்றும் போலி டீ இலைகள் மக்களின் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களில் வரும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. கலப்பட தேயிலை துாள்கள் தவிர, பல இடங்களில் தேயிலை துாள்கள் மீண்டும் உலர்த்திய பின் பேக் செய்யப்பட்டு சந்தைகளில் வழங்கப்படுகின்றன. இதனுடன், பல இடங்களில் கலப்பட நிறங்கள் கொண்ட தேயிலை பாக்கெட்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவதால் பல கடுமையான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
உண்மையான தேயிலைக்கும் கலப்பட தேயிலைக்கும் உள்ள வித்தியாசத்தை கீழ் கண்ட வகையில் தெரிந்து கொள்ளலாம்:
நீங்கள் உட்கொள்ளும் தேயிலை உண்மையானதா அல்லது கலப்பட்டம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய, முதலில் அதை வடிகட்டி காகிதத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது 2-3 சொட்டு தண்ணீர் வைக்கவும். இப்போது இந்த காகிதத்தை தண்ணீரில் கழுவவும். இதற்குப் பிறகு, காகிதத்தை வெளிச்சத்தில் எடுத்துச் சரிபார்க்கவும். காகிதத்தில் ஏதேனும் கறை இருந்தால் அது போலியானது மற்றும் காகிதத்தில் கறை இல்லை என்றால் உங்கள் தேயிலை இலை உண்மையானது.
மேலும் படிக்க | நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் நெல்லிக்காய் ‘4’ நோயாளிகளுக்கு மட்டும் எதிரி
கலப்பட தேயிலை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல நல பாதிப்புகள்
கலப்பட தேயிலை இலைகள் உடலுக்கு மிகவும் ஆபத்தானவை. இத்தகைய தேயிலை இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் பிரச்சனை அதிகரிக்கும். மேலும் கலப்பட்ட தேயிலை பயன்படுத்தினால், அவை புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்துகின்றன என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | சர்க்கரை வியாதி இருக்கா? கண்களுக்கு இந்த பாதிப்புகள் வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ