பச்சிளம் குழந்தைகளின் தேவதைத்தாய்: பிரசவத்திற்கு பிறகு ஒரு தாய்க்கு எவ்வளவு தாய்ப்பால் சுரக்கும்? அதை தானமாக கொடுப்பது என்றாலும் அது எந்த அளவுக்கு முடியும்? தான் பெற்ற ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்க முடியாமல் திண்டாடும் பெண்களையே நாம் பார்த்திருப்போம். அதிகபட்சம் எவ்வளவு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும்? இந்த கேள்வியே வித்தியாசமானதாக தோன்றுகிறதா?
தாய்ப்பால் சுரப்பில் இயற்கையாகவே வரம் பெற்ற பெண்
எலிசபெத் ஆண்டர்சன்-சியரா இரண்டு குழந்தைகளின் தாய், அவர் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஊட்டமளித்துள்ளார் - குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவுகிறார்.
20 பிப்ரவரி 2015 மற்றும் 20 ஜூன் 2018 க்கு இடையில் 1,599.68 லிட்டர் (56,301.20 UK fl oz) ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன்-சியரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உண்மையில், அவர் இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லையாம்!
மேலும் படிக்க | ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... ‘இந்த’ மேஜிக் பானங்கள் நிச்சயம் உதவும்!
இந்த கணக்கில், உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட அனைத்து தாய்ப்பாலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், எலிசபெத் உலகெங்கிலும் உள்ள உள்ளூர் குடும்பங்கள் மற்றும் பெறுநர்களுக்கு நன்கொடை அளித்துள்ளார்.
தாய்ப்பால் சுரக்காது என்று மருத்துவர்கள் கூறும் பல தாய்மார்களுக்கு, எலிசபெத் ஒரு கண்கண்ட தெய்வம் என்றே போற்றப்படுகிறார்.
தாய்ப்பால் தானம்
எலிசபெத் ஆண்டர்சன் சியரா அமெரிகாவின் ஓரிகானை சேர்ந்தவர். "தாய்ப்பால் தெய்வம்" என்றும் அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் உள்ளது . இந்த நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 L தாய்ப்பாலை உற்பத்தி செய்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்
2014 ஆம் ஆண்டில், ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் நோய் இருப்பது கண்டறியப்பட்ட போது, அவரது மார்பகத்தில் இருந்து, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு தாய்ப்பால் சுரப்பு இருந்தது. அந்த நிலையில், தாய்ப்பால் வீணாகப் போவதை விரும்பாத எலிசபெத், பிற் தாய்மார்களுக்கு உதவ முடிவு செய்தார்.அதன்பிறகு அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தோராயமாக 250 குழந்தைகளுக்குதாய்ப்பாலை தானமாக கொடுத்தார்.
மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் நீரிழிவு வரை... வியக்க வைக்கும் ஜாதிக்காய்
செப்டம்பர் 2017 இல் மரியா சூறாவளி தாக்கிய பிறகு எலிசபெத் தனது கணவருடன் புவேர்ட்டோ ரிக்கோவிற்கு சென்றார். ஒரு வாரத்திற்கும் மேலாக அங்கு இருந்தபோதும், அவர் தாய்ப்பால் தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, குறைப்பிரசவத்தில் பிறந்து, பிரசவச் சிக்கல்களால் தாயை இழந்த மூன்று மாதக் குழந்தை ஜோவாகின்னை எலிசபெத் சந்தித்தார்.
குழந்தை ஜோவாகினுக்கு ஃபார்முலா பால் ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது, அந்தக் குழந்தைக்கு எலிசபெத் உதவினார். அதன்பிறகு, குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பாலை பம்ப் செய்து கொடுத்து உலகிலேயே யாருமே செய்ய முடியாத மாபெரும் தானத்தை செய்து வருகிறார் எலிசபெத் சியரா ஆண்டர்சன்.
Elisabeth's body can't stop making milk.
She's been constantly donating her breastmilk to babies who need it most. pic.twitter.com/N7BCcaNOO7
— Guinness World Records (@GWR) July 14, 2023
நோய் வரமா இல்லை சாபமா என்ற கேள்வியை உலகில் யாரிடம் கேட்டாலும் அது சாபம் என்ற பதில் வரும். ஆனால், வரம் என்ற பதிலை எலிசபெத்தைப் பற்றித் தெரிந்த பலரும் சொல்வார்கள்.
தாய்ப்பாலை உற்பத்தி செய்யும் அர்ப்பணிப்புள்ள தாயின் நோய் விவரம்
எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் உள்ளது, பால் உற்பத்தி அதிகரிப்பதால் தாய்ப்பால் வழிந்துக் கொண்டே இருக்கும். தாய்ப்பால் சுரப்பு நிற்காது. இதற்கு காரணம், அவரது உடல் ப்ரோலாக்டின் என்ற ஹார்மோனை உருவாக்குகிறது, அதுவே பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
அரிய வகை நோயை கொண்டுள்ள எலிசபெத் சியரா ஆண்டர்சன் தனது தாய்ப்பாலை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து தானம் கொடுக்கிறார். தனது நோயை நினைத்து வாழ்க்கையில் முடங்கிவிடாமல், நோயையே தனது வாழ்க்கையின் வரமாக மாற்றிக் கொண்டு பலரின் வாழ்க்கைக்கு உயிர் கொடுக்கும் தெய்வத்தாய் என்று போற்றும் செயலை செய்துவருகிறார் எலிசபெத்.
மேலும் படிக்க | Vitamin C அஸ்கார்பிக் அமில குறைபாட்டின் அறிகுறிகள் இதுதான்! சூதானமா இருங்க.
தாய்ப்பால் பம்பிங்
மார்பக குழாய்களைப் பயன்படுத்தி பாலை சேமிக்கும் எலிசபெத், அதனை 'டைனமிக் டூயோ' என்று அழைக்கிறார். உண்மையில், எலிசபெத் ஒரு மார்பக பம்ப் நிறுவனத்துடன் இணைந்து பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பயணத்தை எளிதாக்க உதவுகிறார்.
"ஒரு பம்ப் செய்யும் அம்மாவாக எனது அனுபவத்தை எடுத்துக்கொண்டு, தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பயணத்தில் துணைபுரியும் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்த மார்பக பம்ப் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற முடிந்தது," என்று எலிசபெத் கூறுகிறார்.
எலிசபெத் தாய்ப்பாலை ஒருபோதும் வீணாக்க விடுவதில்லை. இருப்பினும், ஒரு கட்டத்தில் தாய்ப்பாலை பம்ப் செய்வதை நிறுத்த விரும்புகிறார். புரோலாக்டின் உற்பத்தியைக் குறைக்க முயற்சி செய்ய மருந்துகளைப் பயன்படுத்தும் தெரிவை இன்னும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
அவர் தனது நோய்க்கான சிகிச்சையை மருந்துகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக, பலரின் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, தானம் கொடுக்கும் மனிதாபான மாண்புக்கும் ஊக்கமளிக்க விரும்புகிறார்.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு..! லோகேஷ் கனகராஜ் மகிழ்ச்சி ட்வீட்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ