இந்திய சமையலறை ஆயுர்வேத மருத்துவத்தின் இல்லம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. எந்த வகையான நோய்க்கும் சமையலறையில் பாதி மருந்துகள் கிடைக்கும். அத்தகைய ஒரு மூலப்பொருள் பூண்டு என்றால் மிகையில்லை.
பூண்டு ஆரோக்கிய நலன்கள் அடங்கிய உணவாக கருதப்படுகிறது. பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூண்டு ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற உணவாக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஒரு மூலிகை. கடுமையான நோய்களைக் கூட குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இதனுடன், ஆயுர்வேத சிகிச்சையில் இதற்உ முக்கிய பங்கு உண்டு. வீட்டு வைத்தியத்தில், மிகவும் கை கொடுக்கும் மருந்தாகவும் கருதப்படுகிறது.
ஆனால் பல நன்மைகள் இருந்தாலும், சில குறிப்பிட்ட உடல் உபாதை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்தெந்த நபர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது என்பதை இன்று தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையாமல் இருக்க இந்த பழங்களை அவசியம் டயட்டில் சேர்க்கவும்
கீழ்கண்ட வகையிலான உடல் நல பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு சாப்பிடக்கூடாது
கல்லீரல் நோய்
கல்லீரல், குடல், வயிறு பிரச்சனை உள்ளவர்கள் பூண்டை சாப்பிடக்கூடாது. இதனால், குடலில் காயம் ஏற்படலாம் என்பதால், எச்சரிக்கை தேவை. உங்கள் கல்லீரலில் பூண்டில் உள்ள சில கூறுகள் வினைபுரியும். கல்லிரல் குணப்படுத்த கொடுக்கப்படும் மருந்துகளுடன், இது சேர்ந்து கொண்டால் இது பிரச்சனையை அதிகரிக்கிறது.
அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்
சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பூண்டு இரத்தத்தை மெலிதாகச் செய்கிறது. எனவே சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் அதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவர்களின் காயம் ஆறாமல் இருக்கும். இரத்தம் மெலிவதால், காயத்திலிருந்து இரத்தம் வர வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க | Detoxify: உடலில் சேரும் நச்சுக்களை நீக்க இவற்றை டயட்டில் சேர்க்கவும்
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயாளிகள் பூண்டை அளவிற்கு அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அதை அதிகமாக சாப்பிடுவது அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் மிகவும் குறைத்து விடும். இது அவர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனினும் அளவோடு உட்கொண்டால், அது சர்க்கரையை கட்டுப்படுத்து நன்மை பயக்கும். ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR