களாக்காய் பெரிய பிஸ்தாவா? அழகை மெருகேற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கலாக்காய் பழம்

Iron Bullet Fruit: 'இரும்பு புல்லட்' என்ற பெயரில் பிரபலமான பழத்தின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படுத்துபவை... அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், 'இரும்பு மாத்திரை' என்று பெயர் பெற்றது கலாக்காய்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 5, 2023, 08:41 AM IST
  • இரும்பாக உடலை வலுவாக்கும் பழம்
  • பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் பழம்
  • வைட்டமின் சி அதிகம் உள்ள களாக்காய்
களாக்காய் பெரிய பிஸ்தாவா? அழகை மெருகேற்றி ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கலாக்காய் பழம்  title=

அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், 'இரும்பு மாத்திரை' என்று பெயர் பெற்றது நம்ம ஊர் களாக்காய். 'இரும்பு புல்லட்' என்ற பெயரில் பிரபலமான இந்த பழத்தின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்படுத்துபவை... வாங்குபவர்களுக்கு இரும்புச்சத்தைக் கொடுத்தால், பயிரிட்ட விவசாயிகளுக்கு அதிக லாபத்தைத் தரும் பழம் கலாக்காய்

களாக்காய் 
புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்ட களகாய் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால், இரத்த சோகை குறைபாடு உள்ளவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கும். குறிப்பாக பெண்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக காய் ஆகும், இதை காய் என்று மட்டுமல்ல பழம் என்று சொல்லலாம்.

மருத்துவ குணங்கள்

அதேபோல, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை போலவே மருத்துவ குணங்கள் கொண்டது களாக்காய். ஆன்டிஆக்ஸிடன்ட், அல்சர், ஆண்டிடியாபெடிக், ஹெபடோப்ரோடெக்டிவ், கார்டியோவாஸ்குலர், ஆண்டிமலேரியல், ஆன்டெல்மிண்டிக், ஆன்டிவைரல் மற்றும் ஆன்டிஸ்கார்புடிக் பண்புகள் இருப்பதால் இந்த பழம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

தித்திப்பும், புளிப்பும் சேர்ந்த கலவையான சுவை கொடுக்கும் களாக்காய் செடியின் பூ, காய், பழம், வேர் என மொத்தமும் மருத்துவ குணம் கொண்டவை. 

மேலும் படிக்க | Vitamin-C: வைட்டமின் சி பற்றாக்குறையின் முக்கிய அறிகுறிகள்

களாக்காய் இந்த நோய்களை சீராக்கும்

வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் மற்றும் செரிமாணப் பிரச்சனைகளை சரி செய்யும் களாக்காய், குடல் இயக்கத்தை சீராக்குகிறது.  கர்ப்பமான பெண்களுக்கு வாந்தி அல்லது மயக்கம் வந்தால், இந்த களாக்காயை தருவார்கள்.

ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் இரண்டையுமே குறைக்க இந்த களாக்காய் உதவுகிறது. தொடர்ந்து களாக்காய் சாப்பிட்டு வருவதால், கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். கண்களில் ஏற்படும் வெண்படலம், கரும்படலம், ரத்தப் படலம் போன்ற குறைகளை நீக்குவதற்குக் களாக்காயை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் போதும். பற்களின் கறைகளை நீக்கி, ஈறுகளுக்கு பலத்தை தரக்கூடிய பண்பு, இந்த கலாக்காயுக்கு உண்டு. 

களாக்காய்: ஊட்டச்சத்து மதிப்பீடு

100 கிராம் களாக்காயில்,  இரும்புச்சத்து 81.26 மில்லி கிராம், பொட்டாசியம் 3.26 கிராம், ஜிங்க் 1.92 மில்லி கிராம், காப்பர் 51.27மில்லி கிராம், வைட்டமின் சி 0.2 மில்லி கிராம், மாங்கனீஸ் 0.4 கிராம், கரையக் கூடிய நார்ச்சத்துகள் 1.6 கிராம், நார்ச்சத்துகள் 80.17 கிராம், தண்ணீர் 10.33 மில்லி கிராம் என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

களாக்காய் ஊறுகாய்

களாக்காயின் மருத்துவ நன்மைகளை பலவிதங்களிலும் பெறுவதற்காக களாக்காய், காயாக இருக்கும்போதே அதை எடுத்து ஊறுகாய் போட்டு நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்துவார்க்ள். வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட காய்களில் ஊறுகாய் போட்டு வைத்தால், அவற்றின் சத்து குறைவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | எச்சரிக்கை: உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் இந்த அறிகுறிகள் இருக்கும்!

அழகை மெருகேற்றும் களாக்காய்

ஆண்ட்டி-ஏஜிங் எனப்படும் வயது முதிர்வை தடுக்கும் பண்புகளை கொண்ட களாக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், சருமம் பொலிவு பெறும். இளமையை தக்க வைக்கும் களாக்காய் சருமத்துக்கு மிகச்சிறந்த பாதுகாப்பை தருகிறது. களாக்காயை பேக் போல சருமத்தில் போட்டால், சருமம் பளபளக்கும். அதோடு, தலைக்கு பேக் போட்டால், முடி உதிர்வது நின்று, நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.    

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் களாக்காய் இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கிறது என்பது தெரியாததால் தான், ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என விலை அதிகமான பழங்களை உண்கிறோம். ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து கலாக்காய் உண்டுவந்தாலே உடல் மெருகு கூடுவதோடு, மருத்துவரிடம் செல்வதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்கவேண்டாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை காய்கள் மூலமே கட்டுப்படுத்தலாம்! கீல்வாதத்தை சரிசெய்ய காய்கனிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News