உணவு என்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும், முறையான உணவு பழக்கவழக்கம், உடற் செயல்பாடுகள் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். உணவு நன்கு செரிமானமடைந்தால் தான் நமது உடலுக்கு எவ்வித ஆரோக்கிய சீர்கேடும் ஏற்படாது, அதனால் என்ன சாப்பிட வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து அதன்படி சாப்பிடுவது நல்லது. அதேசமயம் உணவு உண்பதற்கு முன்னரும், பின்னரும் நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளது, அதனையும் கவனத்திற்கொண்டு நாம் செயல்படுவது அவசியமானதாகும். சாப்பிட்ட பிறகு நாம் செய்யக்கூடிய சில தவறான பழக்கங்களால் நமக்கு ஆரோக்கிய சிக்கல்கள் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இங்கே கூறப்பட்டுள்ள சில விஷயங்களை சாப்பிட்டவுடன் ஒருபோதும் செய்யாதீர்கள்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை கட்டுபடுத்த உதவும் கொய்யா இலை
1) உணவு உண்டபின் உடனே குளிக்கக்கூடாது, ஏனென்றால் நாம் உண்ட உணவு செரிக்க ரத்தமானது வயிற்றை சூழ்ந்து இருக்கும் அப்போது நாம் குளித்தால் நமது உடலில் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டு ரத்தமானது தோலின் மேற்பரப்பிற்கு ரத்தத்தை திருப்பிவிடும், இதனால் செரிமானம் பாதிக்கப்படும்.
2) உணவு உண்ட உடனேயே கடுமையாக உடற்பயிற்சி செய்தால் செரிமான கோளாறு ஏற்பட்டு உங்களுக்கு குமட்டல், வயிறு வலி மற்றும் வாந்தி போன்ற அசாதாரணமான ஒன்று ஏற்படலாம்.
3) பொதுவாக சாப்பிட்ட உடனே தூங்கினால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பான ஒன்று தான், ஆனால் சாப்பிட்ட உடன் உடனடியாக தூங்கினால் செரிமான பிரச்சனை ஏற்படும், கடுமையான நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படக்கூடும்.
4) தண்ணீர் குடிப்பது நல்லது தான் ஆனால் சாப்பிட்ட பிறகு அதிகப்படியான தண்ணீர் குடித்தால், வயிற்றில் உள்ள அமிலம் நீர்த்து செரிமானம் பாதிக்கப்படும். பெரும்பாலான இந்திய உணவுகளில் குறிப்பாக கிரேவி, பருப்பு, சாம்பார், சாஸ், சாலட் போன்றவற்றில் திரவம் இருப்பதால் அதிகப்படியான நீர் எடுத்துக்கொள்வது நல்லதல்ல.
5) முன்புறமாக வளைவது, குனிவது போன்ற செயல்களைத் தவிர்க்கவும், இது அமில ரிஃப்ளக்ஸை ஏற்படுத்தும்.
6) உணவுக்குப் பிறகு பழங்கள் எதுவும் சாப்பிடக்கூடாது, ஏனெனில் பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சப்படுவது தடுக்கப்படும்.
7) சாப்பிட்டவுடன் டீ அல்லது காபி போன்றவற்றை அருந்தக்கூடாது.
8) மேலும் மது அருந்துதல் அல்லது புகைபிடிப்பதல் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களை உணவு உண்ட பின் ஆபத்தை ஏற்படுத்தும்.
மேற்கண்டவற்றை பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம், மேலும் செரிமான கோளாறு இருப்பவர்கள் உணவு உண்ட பிறகு அரை கப் சூடான தண்ணீரை குடிக்கலாம், இது செரிமானத்திற்கு உதவும்.
மேலும் படிக்க | Uric Acid அதிகரித்தால் ஜாக்கிரதை, இந்த நோய்கள் வரலாம்: நிவாரணம் பெற வழி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ