ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் இனி சுகம்தான்..

ஒரு சில உணவுகள், ஆண்களின் வீரியத்தை அதிகரிக்க உதவும். அவை என்னென்ன உணவுகள் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Apr 23, 2024, 05:07 PM IST
  • ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை..
  • இதை சரிசெய்ய என்ன உணவுகளை செய்ய வேண்டும்?
  • இதோ சில டிப்ஸ்!
ஆண்களின் வீரியத்தை அதிகரிக்கும் உணவுகள்! ‘இதை’ சாப்பிட்டால் இனி சுகம்தான்.. title=

ஆண்கள் பலருக்கு, விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கலாம். இந்த பிரச்சனை, எப்போதாவது எழுந்தால் அது குறித்து கவலை கொள்ள தேவையில்லை. ஆனால், இந்த பிரச்சனை தொடர்ந்து வந்து கொண்டிருந்தால், இதனால் பாதிக்கப்படும் நபருக்கு உடல் அளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படலாம். மேலும், இந்த குறைப்பாடு சில உறவுகளில் விரிசல் ஏற்படலாம். 

இது போன்ற விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படுவதற்கு சில காரணங்கள் குறிப்பிடப்படுகிறது. முக்கியமான பிரச்சனைகளாக மன அழுத்தம், உடல் நலனில் இருக்கும் ஏதேனும் பிரச்சனை, உணவு முறை உள்ளிட்டவை குறிப்பிடப்படுகின்றன. இந்த பிரச்சனை ஏற்பட்டவுடன் மருத்துவர்களிடம் சென்று இது குறித்து ஆலோசனை பெறுவது முக்கியமாகும். இதை சரிசெய்ய நாம், நமது உணவு முறைகளிலும் உணவு பழக்க வழக்கங்களிலும் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டும். அவை என்னென்ன? 

தக்காளி:

சிகப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற காய்கறிகள் இயற்கையான ஆண்டி ஆக்சிடண்ட்ஸாக செயல்படும். இதனால், விறைப்புத்தன்மை குறைபாடு நீங்குவது மட்டுமன்றி இருதய நோய் கோளாறு, நீரிழிவு நோய் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கலாம் என கூறப்படுகிறது. தக்காளியில் லைகோபைன் என்ற சத்து உள்ளது. இது, விந்தனு உற்பத்தியுடன் தொடர்புடையதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது. 

பச்சை இலை காய்கறிகள்:

உடலில் வைட்டமின் பி 9 சத்து குறைவாக இருந்தாலும் விறைப்பு குறைபாடு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனை, பச்சை இலை காய்கறிகள் தடுத்து நிறுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக ஆஸ்பர்கஸ், கீரை காய்கறி, கிளை கோஸ் உள்ளிட்டவை விறைப்புத்தன்மை குறைப்பாட்டினை நீக்கும் காய்கறிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது. 

குடைமிளகாய்:

மிளகாய் வகை காய்கறிகளையும் நமது உணவில் சேர்த்துக்கொண்டால் விறைப்புத்தன்மை குறைப்பாட்டினை நீக்கலாம் என சில மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். குறிப்பாக குடை மிளகாய், ஜலபெனோ உள்ளிட்ட காய்கறிகள், விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் தவிர்ப்பதோடு, காயங்களை குணப்படுத்தவும் முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவுகிறதாம். 

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை சுலபமா குறைக்கும் அட்டகாசமான வீட்டு வைத்தியங்கள்: இனி கொழுப்புக்கு குட்பை!!

நட்ஸ் வகை உணவுகள்:

நட்ஸ் வகை உணவு பொருட்களை நாம் அனைவரும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் உணவு பொருளாக சாப்பிடுவது சகஜம். அந்த வகையில், இது, உடல் நலனுக்கு மட்டுமன்றி விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறதாம். ஆனால், இதை அதிகமாகவும் சாப்பிடக்கூடாது என அறிவுருத்துகின்றனர், மருத்துவர்கள். நட்ஸ் வகை உணவுகளில் நிட்ரிக் வகை ஆக்ஸிட்கள் அடங்கியுள்ளதாம். இவை, விறைப்பின் போது ஆண்குறியில் இருக்கும் தசைகளை மென்மையாக்கவும், இரத்த ஓட்டத்தை சீர் செய்யவும் உதவுவதாக ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

காபி:

கஃபைன், உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும் என்பது பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிகளின் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் மருத்துவ அறிக்கைஅயில், ஒரு நாளைக்கு 2 முதல் 3 கப் காபி குடிக்கும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும், கஃபைனில் உடல் நலனை கெடுக்கும் பல்வேறு அம்சங்கள் அடங்கியிருப்பதால் மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு, இதனை உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளவும். 

டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட்டுகளும், ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாட்டினை நீக்க உதவும் என அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்திருக்கிறது. டார்க் சாக்லேட்டுகளில் கோகோ தனிமங்கள் இருக்கின்றன. இதில் இயற்கை சர்க்கரை வளங்கள் இருப்பதால், உடலுக்கும் கேடு விளைவிக்காது என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை குறைத்து மூட்டு வலிக்கு குட்பை சொல்ல இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News