நாக்கு வெந்துவிட்டதா? எரிச்சலை குணமாக்க எளிய வீட்டு வைத்தியங்கள்

Tips & Tricks To Cure Burnt Tongue: மிகவும் சூடாக சாப்பிட்டால், நாக்கு வெந்து போய்விடும். வெந்து போன நாக்கில் ஏற்படும் எரிச்சலால்,  உணவை சரியாக சாப்பிட முடியாது... நாக்கு எரிச்சலை குணப்படுத்தும் சுலபமான வழிமுறைகள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 8, 2023, 07:12 AM IST
  • சூடான உணவை உண்பதால் நாக்கு வெந்து போவது
  • உடல் சூட்டால் வாயில் புண் ஏற்படுவது
  • நாக்கு எரிச்சலை குணப்படுத்தும் சுலபமான வழிமுறைகள்
நாக்கு வெந்துவிட்டதா? எரிச்சலை குணமாக்க எளிய வீட்டு வைத்தியங்கள் title=

புதுடெல்லி: நமது உணவுகளின் சுவையை நமக்கு உணர்த்தும் நாக்குக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் என்ன செய்வது? நாக்கில் புண் வருவது மற்றும் நாக்கு வெந்து போகும் சமயங்களில் ஏற்படும் வலி பொறுத்தக்கொள்ள முடியாது. நாக்கு வெந்து போவதற்கு காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம். வீட்டு வைத்தியங்கள் மூலம் நாக்கை விரைவாக குணப்படுத்தலாம். 

மிகவும் சூடாக சாப்பிட்டால், நாக்கு வெந்து போய்விடும். சூடாக சாப்பிடுவது, மிகவும் காரமாக சாப்பிடுவது என நமது இயல்பான உணவு உண்ணும் முறைகளால், எச்சரிக்கையாக இருப்பதை சில சமயங்களில் மறந்துவிடுகிறோம். இது மிகவும் பொதுவான பிரச்சனை, ஆனால் நரக வேதனையை கொடுக்கும்.

சில வீட்டு வைத்தியம் நிவாரணம் பெறவும், குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தவும் உதவும். நாக்கில் சூடுபட்டவுடன், அசௌகரியத்தைக் குறைக்க, குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். அதே வேளையில், தீவிரமான தீக்காயங்கள் அல்லது தாங்கம் முடியாத வலி ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகவும். சரியான கவனிப்பு மற்றும் சிறிது பொறுமை இருந்தால், நாக்கில் ஏற்படும் வலியை விரைவில் சரி செய்துவிடலாம்.

நாக்கு வெந்து போனால் செய்ய வேண்டியவை

 

குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கவும்
நாக்கின் வலியைப் போக்க இது எளிதான மற்றும் விரைவான வழிகளில் ஒன்றாகும். ஐஸ் கட்டிகள் இருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதும், உடனடி வலி நிவாரணத்திற்கு உதவும். 

மேலும் படிக்க | உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க.... உணவுகளும் பழக்கங்களும்.! 

தேன்
எரிந்த நாக்கை ஆற்ற உதவும் மற்றொரு இயற்கை தீர்வாக தேன் உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது தேனை தடவவும். தேன் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதால், விரைவில் நாக்கு எரிச்சல் குறையும். கூடுதலாக, இது வாயில் இனிப்பான உணவை ஏற்படுத்துவதால், வலி தொடர்பான எரிச்சல் குறையும்.  

பால் மற்றும் தயிர்
பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்கள் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டவை. அவை நாக்கு எரிச்சலை விரைவாக குணப்படுத்தும். அவற்றின் குளிரூட்டும் தன்மை நாக்குக்கு இதமாக்கும். எனவே எரிச்சல் உணர்வைப் போக்க குளிர்ந்த பாலை பருகலாம் அல்லது தயிர் சாப்பிடலாம்.  

உப்புநீரால் வாயை கொப்பளிக்கவும்
உப்புநீரால் வாயைக் கொப்பளிப்பது, வாய் தொடர்பான அசௌகரியத்திற்கு ஒரு உன்னதமான வீட்டு தீர்வாகும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் உப்பைக் கலந்து மவுத்வாஷாகப் பயன்படுத்தவும். உப்பு நீரை அப்படியே வாயில் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வைத்த பிறகு, வாயைக் கொப்பளித்து நீரை துப்பவும். உப்பு நீர் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

பேக்கிங் சோடா பேஸ்ட்
பேக்கிங் சோடா ஒரு மென்மையான மற்றும் பயனுள்ள தீர்வாக இருக்கும். ஒரு சிறிய அளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். பேஸ்ட்டை எரிந்த இடத்தில் தடவி, குளிர்ந்த நீரில் கழுவுவதற்கு முன் சில நிமிடங்கள் விடவும். பேக்கிங் சோடா வாயில் pH அளவை சமப்படுத்த உதவுகிறது மற்றும் குணப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

மேலும் படிக்க | உடல் இளைச்சு தொந்தி இல்லாம சிக்குன்னு இருக்க வெண் பூசணியை இப்படி சாப்பிடுங்க! சூப்பர் எஃபக்ட்

புதினா இலைகள்
புதினா இலைகள் புத்துணர்ச்சி வழங்குவதோடு, நாக்கிற்கு குளிர்வான உணர்வை ஏற்படுத்தும். புதினா இலைகளை மென்று சாப்பிடுங்கள் அல்லது புதினாவை தேநீராக தயாரித்துக் குடிக்கவும். புதினாவின் இயற்கை பண்புகள் தீக்காயத்தை மட்டுப்படுத்துவடன், எரிச்சலை விரைவில் குணமாக்கும். 

வலி நிவாரணிகள்

வலி நீடித்தால் மற்றும் வீட்டு வைத்தியம் போதுமான நிவாரணம் அளிக்கவில்லை என்றால், இப்யூபுரூஃபன் அல்லது அசெட்டமினோஃபென் போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்துகள் வலி மற்றும் வீக்கத்தை நிர்வகிக்க உதவும், ஆனால் அவை ஒரு தற்காலிக தீர்வாகும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவின் படி பயன்படுத்தப்பட வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள், நிலைமையை நிர்வகிப்பதற்கான சில பரிந்துரைகள் மற்றும் குறிப்புகள் மட்டுமே. வலியோ எரிச்சலோ நீண்ட நேரம் நீடித்தால் அதை புறக்கணிக்காதீர்கள். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படியே நடக்கவும்.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News