சமைக்கும் போது உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு நாளைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய சரியான அளவு பூண்டு பற்றி உறுதியான தகவல் இல்லை என்றாலும், ஒரு நாளைக்கு 3 முதல் 6 கிராம் பூண்டு உட்கொள்வது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அளவிற்கு அதிகமாக பூண்டு எடுத்துக் கொள்வது, உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால் அளவோடு தான் பூண்டை உட்கொள்ள வேண்டும்.பூண்டு அதிகப்படியாக சாப்பிடுவதால், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பல விதமான பக்க விளைவுகள் ஏற்படலாம்.
பூண்டை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொள்வதால் ஏற்படும் உடல நல பாதிப்புகள்:
1. பச்சையாக அதிக அளவில் பூண்டை எடுத்துக் கொள்வதால் தலைவலி உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. பச்சை பூண்டை சாப்பிடுவதால், மூளையில் உள்ள முக்கோண நரம்பு தூண்டப்பட்டு, மூளைக்கு வலிக்கான சிக்னலை அனுப்பும் ந்யுரோபெப்டிடு அளவை அதிகரிக்கிறது. இது மூளையை மூடியிருக்கும் தோல் பகுதியை அடைந்து தலைவலியை உண்டாக்குகிறது.
2. பூண்டில் அல்லிசின் கலவை அதிகம் இருப்பதால், அதிகமாக உட்கொண்டால் கல்லீரலில் உள்ள நச்சுக்களின் அளவு அதிகரிக்கும். இது கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
3. பூண்டு இரத்தத்தை நீர்க்க செய்யும் பண்புகளைக் கொண்டுள்ளது. நீங்கள் பூண்டை அதிகமாக உட்கொண்டால், உங்களுக்கு இரத்தப் போக்கு பிரச்சினைகள் ஏற்படலாம். அறுவை சிகிச்சை, காயம் இருந்தால் இந்த பிரச்சனை மிகவும் ஆபத்தானது.
4. அதிகமாக பூண்டு சாப்பிடுவதால் சருமத்தில் அரிப்பு மற்றும் தடிப்பு உண்டாகலாம். பூண்டில் உள்ள அல்லிநேஸ் என்னும் என்சைம், சருமத்தில் தடிப்பை ஏற்படுத்தக் கூடியதாகும்.
5. பூண்டில் உடல் மற்றும் வாயில் துர்நாற்றம் வீசுவதற்கான பல்வேறு ரசாயனங்கள் உள்ளது. குறிப்பாக, அதிக சல்பர் இருப்பதால், அதனை அதிகமாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Health Alert: காலி வயிற்றில் சாப்பிடக் கூடாத சில உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ