இந்த 3 எளிய யோகா பயிற்சி மூலம் கண் பார்வையை அதிகப்படுத்தலாம்!

மூன்று விதமான எளிய யோகா பயிற்சிகளை செய்வதன் மூலம் கண்களின் பார்வை பளிச்சென்று இருக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 4, 2022, 03:53 PM IST
  • சிறுவர் முதல் பெரியவர் வரை கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.
  • தொற்று நோய் காலத்தில் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.
  • கார்னியா ட்ராக்கோமா போன்ற கண் நோய்கள் வர வாய்ப்புண்டு என WHO கூறியுள்ளது.
இந்த 3 எளிய யோகா பயிற்சி மூலம் கண் பார்வையை அதிகப்படுத்தலாம்! title=

மனித உடலின் முக்கியமான உறுப்பு கண், இதனை நாம் பாதுகாத்து கொள்ளவேண்டும்.  நமது கண் பார்வை சிறப்பானதாக இருந்தால் தான் நமது வாழ்வும் ஆரோக்கியமாக இருக்கும், கண் பார்வையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நம்முடைய வாழ்க்கையே சரியாக அமையாதது போல தோன்றும்.  தற்போது வயது வரம்பன்றி சிறுவர் முதல் பெரியவர் வரை பெரும்பாலானோருக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.  பலரும் ஸ்மார்ட்போன், கணினி, தொலைக்காட்சி போன்றவற்றில் நேரத்தை செலவிட தொடங்கிவிட்டனர் அதிலும் குறிப்பாக இந்த தொற்று நோய் பரவல் காலத்தில் தான் இதன் எண்னிக்கை அதிகரித்திருக்கிறது.

மேலும் படிக்க | முடி உடைவதைக் குறைக்க இதைப் பயன்படுத்தினால் போதும்

தொற்று நோய் காலத்தில் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது, இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு அவர்களும் ஸ்மார்ட்போன் அல்லது கணினியுடனே நேரத்தை செலவிட ஆரம்பித்துவிட்டனர், அதேபோல வேலைக்கு செல்பவர்களும் வீட்டிலிருந்தே கணினி மூலம் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.  இவ்வாறு அதிக நேரம் திரையை பார்த்துக்கொண்டிருப்பதால் பெரும்பாலான மக்களுக்கு கண் நோய் ஏற்படுகிறது.  தனது வாழ்நாளில் ஒருவருக்கு நீரிழிவு, வயது காரணமாக கண் நரம்பில் ஏற்படும் பாதிப்பு, கண்புரை, கார்னியா ட்ராக்கோமா போன்ற பலவிதமான கண் நோய்கள் வர வாய்ப்புண்டு என WHO கூறியுள்ளது.  கண்களை பாதுகாக்க எளிய பயிற்சிகள் உள்ளது, அவற்றை முறையாக தினமும் செய்வதன் மூலம் கண்களின் பாதுகாப்பை மேம்படுத்தலாம்.

முதல் பயிற்சியாக, உங்கள் இரண்டு கைகளையும் நன்றாக சூடு வரும் வரை தேய்த்துக்கொள்ள வேண்டும்.  கைகள் நன்கு சூடானதும், இரு கண்களையும் மூடிக்கொண்டு கண்களை சுற்றி உங்கள் உள்ளங்கையின் சூடு படும்படி கண்கள் மீது உள்ளங்கையை வைக்க வேண்டும்.  சூடு குறைந்ததும் கையை எடுத்து மீண்டும் சூடேற்றி கண்களின் மீது வைக்கவேண்டும், இதேபோல கண்களை திறக்காமல் இரண்டு முறையை இதேபோல் செய்யவேண்டும்.  அதன்பின்னர் கண்களை மெதுவாக திறந்து கொள்ளலாம்.  

yoga

இரண்டாவது பயிற்சியாக, ஒரு பேனா, பென்சில் அல்லது உங்கள் ஆள்காட்டி விரலை கண்களுக்கு நடுவே, மூக்கின் நுனி அருகே வைத்துக்கொண்டு வலது மற்றும் இடது புறமாக நகர்த்த வேண்டும்.  தலையை அசைக்காமல் அந்த பொருள் அசையும் திசையிலேயே உங்கள் கருவிழிகளை மற்றும் நீங்கள் சுழற்ற வேண்டும்.  பின்னர் வட்டம் போடுவது போல் அந்த பொருளை வைத்து சுற்றி முன்னர் செய்தது போலவே கண்களை சிமிட்டாமல் சுழற்ற வேண்டும்.  இவ்வாறு குறைந்தது 5 அல்லது 10 முறை செய்ய வேண்டும், இது ஒரு எளிமையான பயிற்சி.

மூன்றாவது பயிற்சியாக, தூரத்தில் உள்ள பொருட்களை நீங்கள் பார்க்க வேண்டும், உங்களால் எவ்வளவு தூரம் வரை பார்க்க முடிகிறதோ அவ்வளவு தூரம் வரை பார்க்கலாம்.  கணினி அல்லது ஸ்மார்ட்போன் திரைகளை அருகில் வைத்துக்கொண்டு நீண்ட நேரம் அதையே பார்த்தால் கண் நரம்பு மற்றும் தசைகள் எளிதில் சோர்வடைந்துவிடும்.  இந்த பயிற்சியை அடிக்கடி செய்வான் மூலம் தூரப்பார்வை குறைப்பதும் ஏற்படாது.  மேலும் இந்த எளிய பயிற்சியை நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போதும் செய்யலாம்.

மேலும் படிக்க | புகைப்பிடித்தால் கண்களில் பாதிப்பு ஏற்படுகிறதா? அதிர்ச்சி தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News