முட்டையை பிரிட்ஜில் வைக்கும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்!

முட்டைகளை பொதுவாக நம் வீடுகளில் பிரிட்ஜில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2022, 09:52 AM IST
  • முட்டையை மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
  • முட்டையில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது.
  • புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.
முட்டையை பிரிட்ஜில் வைக்கும் வழக்கம் உள்ளதா... இந்த செய்தி உங்களுக்குத் தான்! title=

முட்டைகளை பொதுவாக நம் வீடுகளில் குளிர்சாதன பெட்டியில் அதாவது பிரிட்ஜில் சேமித்து வைக்கும் பழக்கம் உள்ளது. இதனால் முட்டைகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. ஆனால், குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை சேமித்து வைத்தால்
முட்டைகளை மறந்தும் கூட குளிர்சாதன பெட்டியில் வைக்காதீர்கள் என எச்சரிக்கின்றனர் நிபுணார்கள் அதனால் அதன் சுவை கெட்டுப்போவதுடன், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம். முட்டையை மொத்தமாக வாங்கி பிரிட்ஜில் வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. அது  ஆரோக்கியத்திற்கு மிகவும் கேடுன் தரும் என்று ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.

முட்டைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். முட்டையில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. இவற்றில் புரதம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் முட்டைகளை பிரிட்ஜில் வைத்திருப்பதால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், அறை வெப்பநிலையில் வைத்து பராமரிக்கும் முட்டைகளை விட, பிரிட்ஜில் வைக்கப்படும் முட்டைகள் விரைவில் கெட்டுப்போய்விடுவதோடு, அது மிக சீக்கிரம் பாலைப்போல் திரிந்துவிடும் என பகீர் தகவல் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க | Health Alert: முட்டையுடன் கூட்டணி சேரக் கூடாத ‘சில’ உணவுகள்! 

முட்டையை மிகவும் குளிர்ச்சியான இடத்தில் வைத்திருந்த பின், அதனை பயன்படுத்தும் போது அறைவெப்ப நிலைக்கு கொண்டு வரும் நிலையில்,வெப்ப நிலை மாறுபாட்டினால், முட்டையின் ஓட்டில் உள்ள சிறுதுளைகள் வழியே பாக்டீரியாக்கள் வேகமாக வளர்ச்சியடைந்து உள்ளே சென்று விடும் என்கின்றனர்  ஆராய்ச்சியாளர்கள். எனவே முட்டையை வாங்கினால் அதை உடனே சமைத்து விட வேண்டும் அல்லது அறை வெப்பநிலையிலேயே பராமரிக்க வேண்டும்.

மேலும், குளிர்சாதன பெட்டியில் முட்டைகளை வைப்பதால், முட்டைகளின் இயற்கையான சுவை மாறுபட்டு விடும். சுவைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் முட்டையை உட்கொள்ளும் நம், அதனை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பராமரிக்கும் போது, முட்டையின் சத்துக்கள் அழிந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால், பிரிட்ஜில் முட்டையை வைத்து சாப்பிடுவதால், அதன ஆரோக்கிய நன்மைகள் எதுவும் கிடைக்காது என்பதோடு, அதனால் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | Health Alert: சந்தையில் புழங்கும் செயற்கை முட்டைகள்.... கண்டறிவது எப்படி!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News