உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் மூலிகைகள், நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதிலும் மூலிகைத் தேநீர் தயாரித்து அருந்துவது பல்வேறு நன்மைகளை கொடுக்கும். செம்பருத்தி மற்றும் அபராஜிதா இரண்டுமே ஆயுர்வேதத்தில் மிகவும் உன்னதமான மூலிகைகளாக கருதப்படுகின்றன. அதிலும் பெண்களின் மாதவிடாய் வலியை சீர் செய்யும் மூலிகைத் தேநீர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் என்று ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. அதைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
செம்பருத்தியின் மருத்துவ குணங்கள்
சருமத்திற்கும், உடல்நலனுக்கும் அற்புதமான பலன்களை அளிக்கிறது. ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும் செம்பருத்தி பூ, இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான மருத்துவப் பண்புகளைக் கொண்டது. செம்பருத்தி பூவைப் தேநீராக தயாரித்து பருகிவந்தால் ஆரோக்கியம் மேம்படும், இதய பலவீனம் தீரும். சருமத்தின் இளமையை தக்க வைக்கவும் முடி வளர்ச்சிக்கும் பயன்படுகிறது செம்பருத்திப்பூ.
அபராஜிதா மலரின் மருத்துவ பயன்கள்
அபராஜிதா மலர் மட்டுமல்ல, அதன் பூவிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது, நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக செயல்படுகிறது.
மேலும் படிக்க | 10 வண்ணங்களில் உணவுக்கு பயன்படுத்தும் உப்பு! சுவையிலும் வித்தியாசம் காட்டும் உப்பு
இந்த மலர்கள் பல கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும் பார்வையை மேம்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும். அபராஜிதா மலர் பல ஆயுர்வேத சிகிச்சைகளில் முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் அபராஜிதா பூவில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றுக்கு அருமையான இந்த மலர், உடலில் ஏற்படும் பிடிப்புகள் மற்றும் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை மற்றும் மாதவிடாய் வலியை குறைக்க உதவும்.
செம்பருத்தி மற்றும் அபராஜிதா பூக்களில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இணையும்போது, தோல், முடி, மாதவிடாய் மற்றும் மனநலப் பிரச்சினைகளை நிர்வகிக்க உதவும். இரத்த அழுத்தம், மாதவிடாய் பிடிப்புகள் மட்டுமல்ல, இரத்தப்போக்கு கோளாறுகள், பதட்டம், முகப்பரு, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி ஆகியவற்றை சமாளிக்க உதவும் இந்த மூலிகைத் தேநீரை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | இந்த மூலிகை தண்ணீரை குடியுங்கள்.. பல சிறந்த பலன்களைப் பெறுவீர்கள்
செம்பருத்தி + அபராஜிதா மலர் ஆயுர்வேத தேநீர் செய்முறை
2 அபராஜிதா பூக்கள், 1 செம்பருத்தி பூ, 1 கப் தண்ணீர்
தண்ணீரில் இரண்டு விதமான பூக்களையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். 5-7 நிமிடங்கள் கொதிக்க விட்டால், தண்ணீர் ஊதா நிறமாக மாறும். இந்த மூலிகைத் தேநீரில், ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.
காலையில் வெறும் வயிற்றில் இந்த மூலிகைத் தேநீரைக் குடித்தால் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். அதேபோல, உணவு உண்ட பிறகு குடிப்பதைவிட, உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த தேநீரை குடிக்கலாம்.
மேலும் படிக்க | தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சருமம் அழகு மேம்படும், உடல் இளைக்கும்
இந்தத் தேநீரில் துத்தநாகம், கால்சியம், மாங்கனீசு, வைட்டமின் B9, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிப்படுத்தும் பிற பயனுள்ள சேர்மங்களைக் கொண்டுள்ளது. செம்பருத்தியுடன் அபராஜிதா மலரின் மூலிகைத் தேநீர் குடிப்பதால், உடல் எடை கட்டுப்படும், கெட்ட கொலஸ்ட்ரால் குறையும், இரத்த சர்க்கரை அளவு குறையும் மற்றும் வீக்கம் குறையும்.
சுகாதார எச்சரிக்கை
ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்ட இந்த தேநீர், நோய் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. பாலூட்டும் இளம் தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி தேநீர் அருந்தக் கூடாது.
(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். இதற்கு ஜீ தமிழ் நியூஸ் பொறுப்பேற்காது)
மேலும் படிக்க | 15 நாட்களில் தொப்பை கரைய இந்த மேஜிக் பானம் குடிச்சா போதும்.. ஈசியா குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ