Health Tips For Winter Season: காளான்கள் (Mushrooms) இப்போது நமது சுற்றுவட்டார கடைகளிலேயே எளிமையாக கிடைக்கும் ஒன்றாக மாறிவிட்டது. முன்பை விட காய்கறி கடைகளில் காளான்கள் அதிகம் விற்பனையாவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், காளானை சாப்பிட மக்கள் அதிகம் விருப்பம் காட்டுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதிலும் அதன் ருசிக்காக எடுத்துக்கொள்வோர் ஒருபுறம் இருக்க, அதில் இருக்கும் ஊட்டச்சத்தை கணக்கில் எடுத்தும் அதை சாப்பிடுகின்றனர்.
காளானை நீங்கள் வறுத்தோ, அவித்தோ மாசாலாக்களை சேர்த்தும் சாப்பிடலாம், அல்லது எளிமையாக வேகவைத்து சூப்பாக கூட செய்து சாப்பிடலாம். மற்ற காலகட்டங்களை விட இதுபோன்ற குளிர்காலத்தில் காளானை சாப்பிடுவது பெரியளவில் நன்மையை அளிக்கும்.
குளிர்காலத்தில் பலரின் உடல்நிலையும் மோசமாகும் வாய்ப்பு அதிகம். காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகள் வரவும் வாய்ப்புள்ளது. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதும் அவசியம் ஆகிறது. இதற்கு காளான் உதவுகிறது. மேலும், செரிமானம் அமைப்பு மோசமாகியிருந்தால் அதனை சீர்செய்யவும் காளான் உதவும். எனவே தான் காளானை குளிர்காலத்தில் சாப்பிட வேண்டியது அவசியமாகிறது. இதனால் கிடைக்கும் நன்மைகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை வேகமாக குறைக்கும் ஆரோக்கியமான பழங்கள்: பட்டியல் இதோ
உடல் எடையை குறைக்கும்
காளான்கள் குறைந்த கலோரிகள் கொண்டவை. எனவே இதை நீங்கள் பசியாற சாப்பிட்டாலும் உங்களுக்கு உடல் எடை அதிகரிக்காது. வயிறு நிறைந்த உணர்வையும் தரும். இதில் நீர்ச்சத்தும் அதிகம் இருக்கிறது, நார்ச்சத்தும் அதிகம் இருக்கிறது. வயிறு நிறைவடைந்தால் தேவையில்லாமல் நொறுக்குத்தீனிகளை கொறிக்கும் பழக்கமும் விட்டுப்போகும்.
இதயத்திற்கு நல்லது
காளான் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒன்றாகும். பல வகை காளான்களில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. இது இதயம் ஆரோக்கியமாக (Heart Health) இருப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். மேலும், காளானில் உள்ள நார்ச்சத்து உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதன் மூலம், இதய நோய் வருவதற்கான ஆபத்தும் குறைகிறது.
குழந்தைகளுக்கு அவசியம்
துத்தநாகம் அதிகம் உள்ள காளான்களும் சந்தையில் கிடைக்கின்றன. இவரை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமின்றி குழந்தைகள், சிறுவர்களின் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கும். எனவே, குழந்தைகளுக்கு அடிக்கடி காளானை சமைத்துக்கொண்டுங்கள்.
செரிமானத்திற்கு நல்லது
காளானில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து இருப்பதால் ஆரோக்கிய செரிமான அமைப்புக்கு (Digestive System) உதவிகரமாக இருக்கும். முக்கியமாக இதில் இருக்கும் கரையாத நார்ச்சத்தால் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை வராது. அதுமட்டுமின்றி, கரையும் நார்ச்சத்தால் ரத்த சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவும் சீராக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
காளானில் வைட்டமிண்கள், கனிமங்கள், ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கின்றன. எனவே, இதனை அடிக்கடி சாப்பிடுவது அவசியமாகிறது. அதிலும் குறிப்பாக வைட்டமிண் D அதிகம் இருக்கிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாவது (Immunity) மட்டுமின்றி எலும்பும் பலமாகும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன்னர் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | ஒல்லி பெல்லி உடம்பு வேண்டுமா? தினமும் இந்த பானங்களை குடித்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ