உணவுப்பொருளாக பயன்படும் பால் சரும அழகினை மேம்படுத்தவும் உதவுகிறது. இயற்கையாகவே பால் சிறந்த க்ளென்சராக பயன்படுகிறது, இது முகத்தில் உள்ள அழுக்குகள், கிருமிகள் போன்றவற்றை நீக்கி பளபளப்பான சருமத்தை கொடுக்கிறது. அதனால் பாலுடன் மஞ்சள் கலந்த பேஸ் வாஷ்களை பயன்படுத்துங்கள், இது 99.9% பாக்டீரியாவால் முகத்தில் ஏற்படும் பருக்களை நீக்குகிறது. பாலில் உள்ள பிஹெச் மதிப்பு அனைவரின் சருமத்திற்கும் ஏற்ற வகையில் இருப்பதோடு முகத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்குகிறது.
மேலும் படிக்க | Belly Fat: தொப்பையை குறைக்க இந்த பானங்கள் உங்களுக்கு உதவும்
பொதுவாக மாய்ஸ்ச்சரைசர் பயன்படுத்துவது முகத்தை ஹைடிரேட்டாக வைத்திருக்க உதவும், அதுவும் இந்த கோடைகாலத்தில் சிறந்த மாய்ஸ்ச்சரைசர்களை உபயோகிக்க வேண்டும். ஜோஜோபா எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த மாய்ஸ்ச்சரைசர் சருமத்திற்கு நல்லது, மேலும் கோடைகாலத்தில் நல்ல நறுமணம் மிக்க மாய்ஸ்ச்சரைசர்களை பயன்படுத்துவது புத்துணர்ச்சி அளிப்பதாக தோன்றும்.
அக்குள்களில் அதிகளவு இறந்த செல்கள் தோன்றி சருமத்தை பாதிக்கும், ஷேவிங், வேக்சிங், இறுக்கமான உடை அணிதல்,வியர்வை, சிறிய கட்டிகள் போன்றவற்றால் சருமம் போன்றவற்றால் சருமம் பாதிக்கும். அதனால் நீங்கள் பயன்படுத்தும் டியோ ரோல் 0% ஆல்கஹால் இருக்கும் படியாகவும், நீண்ட நேரம் மனம் வீசக்கூடியதாகவும் மற்றும் சருமத்தில் எரிச்சல் ஏற்படுத்தாத வகையிலும் இருக்கும்படியாக பார்த்து கொள்ளுங்கள்.
சோற்று கற்றாழை சருமத்திற்கு மிகவும் பாதுகாப்பான ஒன்று, இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் தேர்வுசெய்யும் பாடி லோஷன்கள் எஸ்பிஎஃப்-15 என்ற அளவிலும், சோற்று கற்றாழை பிளேவராகவும் இருப்பது அவசியமானது. இந்த வகை பாடி லோஷன்களில் இருக்கும் சீரம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, சருமம் மென்மையாக இருக்கும்.
வெயில் காலத்தில் சோப்புகள் சருமத்திற்கு அவ்வளவு உதவிகரமாக இருப்பதில்லை. சோப்பிற்கு பதிலாக ஷவர் ஜெல்களை பயன்படுத்துவது சருமத்திற்கு குளிர்ச்சியையும் அதே சமயம் உடனடியாக புத்துணர்ச்சியை அளிப்பதாகவும் அமையும். நீர் அல்லி, சம்மங்கிப்பூ மற்றும் எலுமிச்சை பிளேவர்கள் கொண்ட ஷவர் ஜெல்லை பயன்படுத்துவது சருமத்திற்கு புத்துணர்வை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க | Raw Ginger: மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR