கடந்த 24 மணி நேரத்தில், 63,371 புதிய பாதிப்புகள் மற்றும் 895 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 73,70,469 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆக்டிவ் கோவிட் -19 பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை விடக் குறைந்துள்ளது என சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) தெரிவித்துள்ளது.
"இந்த குறிப்பிடத்தக்க சாதனை மத்திய அரசு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விளைவாகும், இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகள் குணமடைந்து, குணம்டையும் விகிதம் அதிகரித்துள்ளதோடு, நாட்டில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துள்ளது" என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுப்படி, நாட்டின் கோவிட் -19 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73,70,469 ஆக உள்ளது, இதில் aஅக்டிவ் பாதிப்புகள் 7,95,087. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65,24,596 மற்றும் 1,12,998 இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
முன்னதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நாட்டில் கோவிட் -19 க்கு பரிசோதனை எண்ணிக்கை 9.2 கோடியைத் தாண்டியதாகக் கூறியிருந்தன. நாட்டில் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 9,22,54,927 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 15 அன்று 10,28,622 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையும் இதில் அடங்கும்.
கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் அடுத்த 2.5 மாதங்கள் மிகவும் முக்கியமானவை என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பண்டிகை காலம் மற்றும் குளிர்காலம் காரணமாக கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் அடுத்த இரண்டரை மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க நடத்தை நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும், என ஹர்ஷ் வர்தன் கூறினார்.
கோவிட் -19 க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில், நோய்த்தொற்று சிகிச்சையில் இந்தியா தொடர்ந்து புதிய மைல்கற்களை பதிவு செய்து வருவதாக அமைச்சர் கூறினார். "தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எங்கள் பரிசோதனை திறனை நாங்கள் மிகவும் அதிகரித்துள்ளோம். மாஸ்குகள், பிபிஇ கருவிகள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவற்றின் தேவைகளை பொருத்தவரை, இந்தியாவும் இப்போது தற்சார்பை அடைந்துள்ளது, நாம் முன்னர் இறக்குமதி செய்து பயன்படுத்தினோம்" என்று அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க | Covid சிகிச்சைக்கு இந்த 4 மருந்துகள் பயனளிக்காது என WHO தகவல்!!