ஆண்மையை அட்டகாசமாய் பூஸ்ட் செய்ய இந்தக் காயில் அப்படி என்ன தான் இருக்கு?

Drumstick Flower Health Benefits: சைவ உணவுகளில் முருங்கைக்கு முதலிடம் உண்டு. அதிலும், முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் கொண்டவை

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2024, 11:46 PM IST
  • நோய்களை ஓட ஓட விரட்டும் முருங்கைப்பூ...
  • ஆற்றலை அள்ளித்தரும் கற்பகத் தரு
  • இரும்புச்சத்தை குத்தகைக்கு எடுத்திருக்கும் முருங்கை மரம்
ஆண்மையை அட்டகாசமாய் பூஸ்ட் செய்ய இந்தக் காயில் அப்படி என்ன தான் இருக்கு? title=

உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் உணவுகளில் காய்கறிகளுக்கு முதலிடம் உண்டு. அதில், சைவ உணவுகளில் முருங்கைக்கு முதலிடம் உண்டு. அதிலும், முருங்கை மரத்தின் ஒவ்வொரு பாகங்களும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் கொண்டவை.

ஆரோக்கியமாக வாழ நாம், நமது உணவில் சேர்க்க மருத்துவர்கள் முருங்கையை பரிந்துரைக்கின்றனர். நீரிழிவு, புற்றுநோய் உள்ளிட்ட பல தீவிர நோய்களில் இருந்து உடலை முருங்கை காக்கிறது. உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை எளிதில் தரும் முருங்கைக்காய், பல வகையான நோய்களைக் குணப்படுத்துகிறது.

அதிலும், முருங்கை மரத்தில் இருந்து கிடைக்கும் காய், இலை, பூ, ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலில் பல நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.  

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் முருங்கை 

முருங்கையில் கலோரிகள், மினரல்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இதுவே உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும் முருங்கை எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உணவில் முருங்கைக்காயையோ, முருங்கையிலையையோ அல்லது பூவையோ சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோய் முற்றிலும் கட்டுக்குள் இருக்கும்.’

மேலும் படிக்க | பலவீனத்திற்கே ‘அல்வா’ கொடுக்கும் ஹல்வா! ஆரோக்கியமான எலும்புகளுக்கு சூப்பர் உணவு!

முருங்கை பூவின் மருத்துவ குணங்கள்
முருங்கை பூவை சமைக்கும்போது, நன்றாக சுத்தம் செய்து சமைக்க வேண்டும். இதில் புழுக்கள் இருக்கும் வாய்ப்பு அதிகம் உண்டு. ஆனால், ஆண்மை குறைவுக்கு முருங்கைப்பூவைப் போன்ற அருமையான மருந்து இல்லை என்றே சொல்லலாம். பருப்புடன் சேர்த்து முருங்கைப்பூவை சமைத்து உண்பதும், முருங்கைப்பூவை சூப் வைத்து குடிப்பதும் ஆண்களின் பாலியல் செயல்பாட்டுக்கு ஊக்கமளிக்கும்.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் முருங்கை

முருங்கையை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடலின் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவு கணிசமாக அதிகரிக்கிறது. வைட்டமின் ஏ மற்றும் சி தவிர,  பீட்டா கரோட்டின் மற்றும் நியாசிமைசின் ஆகியவை ஏராளமாக உள்ளதால், ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற்றுநோய் செல்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் பருமனைக் குறைக்கும் முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை சூப் குடிப்பது ஆரோக்கியமானது. ஒல்லியாக நினைப்பவர்களும், தொந்தி தொப்பை இருப்பவர்களும் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால், சட்டென்று உடல் எடை குறையும். ஆனால், ஆரோக்கியமான முறையில் உடல் எடை முறைவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.  

இரத்த அழுத்தத்திற்கு முருங்கை

முருங்கைக்காய், பூ, இலை என அனைத்திலும் நியாசின் மற்றும் ஐசோதியோசயனேட் போன்ற உயிர்வேதியியல் கலவைகள் உள்ளன. எனவே, முருங்கையை தொடர்ந்து உட்கொள்வதால் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் 

நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ள முருங்கைக்காயை சாப்பிடுவதால் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். 

மேலும் படிக்க | 2 வாரத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்க வேண்டுமா, அப்போ இப்படி பண்ணுங்க

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News