காலையில் அருகம்புல் ஜூஸ் ஏன் குடிக்க வேண்டும் தெரியுமா?

வெப்பத்தை சீராக வைக்க உதவும் அருகம்புல் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 3, 2023, 10:32 PM IST
  • அருகம்புல் ஜூஸ் நன்மைகள்
  • காலையில் குடிக்க வேண்டும்
  • உடல் வெப்பத்தை சீராக்கும்
காலையில் அருகம்புல் ஜூஸ் ஏன் குடிக்க வேண்டும் தெரியுமா? title=

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல் ஜூஸ் நன்மைகள் குறித்து ஏராளமாக சொல்லப்பட்டுள்ளது. இதில் இருக்கும் நன்மைகள் பல பிரச்சனைகளுக்கு இயற்கையாகவே தீர்வு காண உதவுகிறது. சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும். இது உடல் வெப்பத்தை சீராக வைக்கிறது. பித்தத்தை சமன் செய்கிறது. தொற்று நோய் கிருமிகளிடமிருந்து உடலை பாதுகாக்கிறது. உடலின் ரத்த சுத்திகரிப்புக்கு அருகம்புல் சாறு பேருதவியாக அமைகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்த சோகை, ரத்த அழுத்தத்தையும் அருகம்புல் சாறு சீராக்குகிறது.

மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!

அருகம்புல் சாறையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாறு சிறுநீரக பாதை அழற்சியை தடுக்கிறது. இரத்தக்குழாய்கள் தடிமனாகாமலும் சுருங்கி போகாமலும் இருக்க செய்து, இரத்த ஓட்டத்தை சரி செய்கிறது. இதனால் உயர் மற்றும் குறை இரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை அருகம்புல் சாறுக்கு உண்டு.

தோல் வியாதி உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல் பிரச்னை தீரும். நரம்புத் தளர்ச்சி மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக உள்ளது. கர்ப்பப்பை கோளாறுகளும் நீங்கும். வாயுத்தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம்.

அருகம் புல் சாறு நம் உடலில் இன்சுலினை அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். அருகம் புல் சாறை பருகிய பின் அரை மணி நேரத்துக்கு எந்த விதமான உணவும் எடுத்துக்கொள்ளக் கூடாது. அப்பொழுதுதான் இதனுடைய முழுப்பயனும் நாம் பெற முடியும். அருகம் புல், பல், ஈறு கோளாறுகளை நீக்கும், வாய் துர் நாற்றத்தைப் போக்கும்.

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News