காலை வேளையில் வெறும் வயிற்றில் சீரக தண்ணீரைக் குடிப்பது பல நன்மைகளை தரும் என்று பல செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கிறது. சீரக தண்ணீர் குடிப்பது குடல் ஆரோக்கியத்தின் ஒட்டுமொத்த நிலையை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது, சீரக தண்ணீர் உண்மையிலேயே ஒட்டுமொத்த உடல் எடை இழப்புக்கு உதவும் அதிசய பானமாக செயல்படுகிறது. கொழுப்பைக் குறைக்கும் நற்பண்புகள் சீரக தண்ணீரில் நிறைந்துள்ளது மற்றும் இது செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு கிளாஸ் சீரக தண்ணீர் குடிப்பது கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் அஜீரணத்தை தடுக்கிறது.
மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?
சீரகத்தில் உள்ள தைமோகுவினோன் கல்லீரலை பாதுகாக்கிறது, இது செரிமானத்தை ஊக்குவிப்பதால் வயிற்று கொழுப்பு குறைகிறது. சீரக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இதை காலையில் சாப்பிட்டால் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் அளவைக் குறைக்கிறது. மேலும் இதில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இதனால் ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு அதிகரிக்கிறது.
ஆயுர்வேதத்தின்படி, உடல் எடை குறைப்பிற்கு உதவும் உணவுகளில் சீரகம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. செல்களுக்கு இடையில் இருக்கும் கொழுப்பு மூலக்கூறுகளை சீரகம் உடைத்து இந்த கழிவுகளை அழிக்கிறது, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதன் மூலம் உடல் கழிவுகளை உருவாக்குவதைத் தடுக்கிறது. இயற்கையில் சீரகம் ஒரு சூடான பொருள் என்பதால் இது உடலின் வெப்பநிலையை அதிகரிக்கிறது. மேலும் சீரகம் கருப்பையிலுள்ள நச்சை நீக்கவும், பசியை தூண்டவும் உதவுகிறது. சீரக தண்ணீரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் குடிக்கலாம், காலையில் தான் குடிக்க வேண்டும் என்றில்லை அதை உணவோடு கூட குடிக்கலாம் மற்றும் இதனை கொதிக்க வைத்து இளஞ்சூடாக அருந்துவது நல்லது.
மேலும் படிக்க | உடல் எடையை ஒய்யாரமா குறைக்கணுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ