ரொம்ப குறட்டை வருதா?... இதை ஃபாலோ பண்ணுங்க குறட்டைக்கு குட் பை சொல்லலாம்

சில வழிகளை கவனமாக பின்பற்றினால் தூக்கத்தை கெடுக்கும் குறட்டைக்கு நாம் குட் பை சொல்லலாம்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jul 16, 2022, 04:14 PM IST
  • குறட்டையை விரட்ட எளிய வழிகள் இருக்கின்றன
  • மது அருந்துவதாலும் குறட்டை வருகிறது
  • குறட்டை சுவாச பிரச்னையால் ஏற்படுகிறது
ரொம்ப குறட்டை வருதா?... இதை ஃபாலோ பண்ணுங்க குறட்டைக்கு குட் பை சொல்லலாம் title=

தூக்கத்திற்கு இருக்கும் எதிரிகளில் முக்கியமானது குறட்டை. குறட்டை ஏற்படுவதால் அடுத்தவர்களின் தூக்கம் கெடுவதோடு குறட்டை விடுபவரும் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார். குறட்டையை எப்படியாவது போக்கிவிட வேண்டுமென்று பலரும் பல சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், சில எளிய வழிகளை பின்பற்றினாலே குறட்டைக்கு குட் பை சொல்லலாம். அப்படி இருக்கும் வழிகள் பின்வருமாறு:

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான குடி நீரில் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடியைப் போட்டுக் கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகினால் குறட்டை தொல்லை ஓயும்.

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து கலக்கி இரவு படுக்க செல்லும் முன் தினமும் பருகலாம். மஞ்சள் தூள் கலப்படமின்றி சுத்தமாக தயாரிக்கப்பட்டதாக இருந்தால் நல்லது.

மேலும் படிக்க | வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்பகால அறிகுறிகள் !

காலையிலும் இரவு படுக்க செல்லும் முன்னும் மூக்கில் 2 சொட்டு மிதமான சூடுள்ள பசு நெய்யை விட்டுக்கொள்ளலாம். நெய்யுக்குப் பதில் பிராமி எண்ணை கிடைத்தால் அதனையும் உபயோகிக்கலாம்.

மேலும், படுக்கும்போது  சாதாரணமாக படுப்பதற்குப் பதிலாக, சற்று அதிக அளவில் தலையணைகளைப் பயன்படுத்தி தூங்கினால் குறட்டையை தவிர்க்கலாம்.

அதேபோல், மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து தூங்கலாம். இடது பக்கவாட்டிலேயே திரும்பி அதிக நேரம் உறங்குவது நல்லது. இரவு முழுவதும் இடதுவாக்கில் படுப்பது சாத்தியமில்லைதான். இருப்பினும் பக்கவாட்டில் படுத்து உறங்கினால், அது குறட்டையை தடுக்கும்.

Snoring

சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியான சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம். நீராவி பிடித்தாலும் குறட்டை வருவதை தவிர்க்கலாம். 

இரவில் தூங்கச் செல்லும் முன் பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து குறட்டைக்கு வழிவகுக்கும்.  எனவே, கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்த்துவிடுங்கள்.

மேலும் படிக்க | கருவளையங்களால் பிரச்சனையா? இப்படி செஞ்சி பாருங்க, உடனடி பலன் கிடைக்கும்

புகைப்பிடித்தலால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகளில் குறட்டைவிடுவதும் ஒன்று. புகைபிடிக்கும்போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குகிறது. இது மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News