Health News: தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன நன்மை தெரியுமா?

உடலில் எண்ணெய் பசை இருப்பது சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்க உதவும். அதுமட்டுமல்ல, உடலில் எண்ணெய் பசை குறைந்துபோனால் ஆரோக்கிய குறைவு ஏற்படும். விரைவிலேயே முதிய தோற்றம் வந்துவிடும். தொப்புளில் எண்ணெய் போடுவதால் உடல் சூடு குறைவதோடு, வேறு பல நன்மைகளும் உண்டு.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2021, 10:43 PM IST
  • உடலில் எண்ணெய் பசை இருப்பது சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்கும்
  • தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால் என்ன நன்மை தெரியுமா?
  • ஆரோக்கியமான உடலைப் பெற தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்யவும்
Health News: தொப்புளில் எண்ணெய் மசாஜ் செய்தால்  என்ன நன்மை தெரியுமா?  title=

உடலில் எண்ணெய் பசை இருப்பது சருமம் வறட்சியடையாமல் பாதுகாக்க உதவும். அதுமட்டுமல்ல, உடலில் எண்ணெய் பசை குறைந்துபோனால் ஆரோக்கிய குறைவு ஏற்படும். விரைவிலேயே முதிய தோற்றம் வந்துவிடும். தொப்புளில் எண்ணெய் போடுவதால் உடல் சூடு குறைவதோடு, வேறு பல நன்மைகளும் உண்டு.
 
கடுகெண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது நெய்யை தொப்புளில் போட்டு மசாஜ் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், இன்றிலிருந்து சில நாட்கள் போட்டுப் பாருங்கள்.அதன் நன்மை தெரியும்.  இரவில் தூங்குவதற்கு முன் தொப்புளில் எண்ணெய் தடவினால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.

தொப்புளில் எண்ணெயைப் பயன்படுத்துவதால் தலைமுடி மற்றும் உடல் சருமம் ஆரோக்கியமாகவும், ஊட்டச்சத்துடனும் மாறும். சமையலுக்கு மட்டுமல்ல, மையலுக்கும் எண்ணெய்கள் பயன்படும். ஆனால் ஆரோக்கியமான உடலைப் பெறுவதற்கும் பல நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் தொப்புளில் எண்ணெயைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.

தொப்புளில் தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயைப் போட்டு மசாஜ் செய்யலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தொப்புள் வழியாக உடலுக்குச் சென்று பல நன்மைகளை செய்யும். இந்த எண்ணெய்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை பல நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும்.  

Also Read | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்,  தொப்புளில் நெய்யை வைத்து மசாஜ் செய்வதால், மலம் இளகி வயிற்று வலி குறையும். கூடுதல் நன்மையாக முழங்கால் வலியும் உடலில் ஏற்படும் வீக்கமும் குறையும். தொப்புள் வழியாக நெய் விரைவாக உடலுக்குள் உறிஞ்சப்படுகிறது. குளிர்காலத்தில், உதடுகள் வறண்டு, வெடித்துப் போகும். இரவில் தூங்குவதற்கு முன், தொப்புளில் நெய் வைத்தால், உங்கள் உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறக்கூடும். 

அதேபோல், கடுகு எண்ணெயை தொப்புளில் பயன்படுத்துவதும் பல வழிகளில் பயனளிக்கும். மூட்டுவலி வலி இருந்தால், கடுகு எண்ணெயால் தொப்புளை மசாஜ் செய்யவும். இரவில் தூங்குவதற்கு முன் சில துளிகள் கடுகெண்ணெயை தொப்புளில் வைத்து மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி குறைந்துவிடும்.

 பாதாம் எண்ணெயிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பதாம் பெரிய அளவில் பங்களிக்கிறது.  தொப்புளில் பாதாம் எண்ணெயை ஒரு சில துளிகள் போட்டு மசாஜ் செய்யுங்கள். இது சருமம் ஆரோக்கியமாகவும், இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவும். இரவில் தூங்குவதற்கு முன் இந்த எண்ணெயை தொப்புளில் வைத்து மசாஜ் செய்த பின் தூங்கவும். சில நாட்களில் நீங்கள் ஒளிரும் முகத்துக்கு சொந்தக்காரர் ஆகிவிடலாம்.  

Also Read | Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!
 
மிகச் சிலரே தங்கள் அன்றாட வாழ்க்கையில் வேப்பெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பல சிக்கல்களிலிருந்து விடுபட வேப்பெண்ணை அருமருந்தாக செயல்படும். முகத்தில் முகப்பரு நிறைந்திருந்தால், வேப்பெண்ணெயை முகத்திலும் தொப்புளிலும் தடவவும். உடலில் வெண்புள்ளிகள் இருந்தால், தொப்புளில் வேப்ப எண்ணெயைப் பயன்படுத்துங்கள், அது சருமத்திலுள்ள வெண்புள்ளிகளை படிப்படியாகக் குறைத்துவிடும்.  

ஆரோக்கியம், முடி மற்றும் சருமத்திற்கு ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும். இரவில் தூங்குவதற்கு முன் சில துளிகள் ஆலிவ் எண்ணெயை தொப்புளில் வைத்து தேய்த்து விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமம் நீண்ட காலம் இளமையாக இருக்கும். பளிச்சென்று ஒளிரும்.

Also Read | Health benefits of Corn: தினசரி உணவில் சோளத்தை சேர்த்தால் நோயே நெருங்காது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News