வாழைப்பழம் அதிகம் சாப்பிடுகிறீர்களா?... கவனம் தேவை

வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றன.  

Written by - க. விக்ரம் | Last Updated : May 28, 2022, 04:50 PM IST
  • வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்னைகள்
  • வாழைப்பழத்தாலும் பக்க விளைவுகள் உருவாகும்
வாழைப்பழம் அதிகம் சாப்பிடுகிறீர்களா?... கவனம் தேவை title=

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி தமிழில் உண்டு. எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் நிச்சயம் அது நமது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். அப்படித்தான் வாழைப்பழமும்.

வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் பல பிரச்னைகளை போக்க உதவுகிறது.ஆனால் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் சில பக்க விளைவுகள் உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். வாழைப்பழத்தில் 105 கலோரிகள் உள்ளதுதான் எடை அதிகரிப்புக்கு காரணம்.

Banana

அதை குறைப்பதற்கு மற்ற பழங்களோடு அதாவது, ஆரஞ்சு, துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணி, ஒரு கப் திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பு மட்டுப்படும்.

அதேபோல், வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஒற்றை தலைவலி, சுவாச பிரச்னைகள், சிறுநீரக பிரச்னைகள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள், பற்சிதைவு, சோம்பல், வாயுத்தொல்லை உள்ளிட்ட பிரச்னைகள் உருவாகும்.

மேலும் படிக்க | White Hair Problem: நரை முடி கருப்பாக மாற இதை ஃபாலோ பண்ணுங்க

மேலும், ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் நலம். அப்படி சாப்பிட்டால் அவர்களுக்கு, மூக்கு ஒழுகுதல், மூச்சிரைப்பு, இருமல், தொண்டை எரிச்சல் போன்ற ஒவ்வாமை ஏற்படும்.

Banana

வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிரமப்படும். இது ஆபத்தை விளைவிக்கும். எனவே சிறுநீரக பிரச்சனை இருந்தால் வாழைப்பழம் உண்பதை நிச்சயம் குறைக்க வேண்டும். 

மேலும் படிக்க | உயர் இரத்த அழுத்த நோயாளிகள் இந்த ஜூஸை கண்டிப்பா குடிக்கணும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News