Diabetes: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத பானம்

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 5, 2022, 04:34 PM IST
Diabetes: ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் அற்புத பானம் title=

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.

சர்க்கரை நோயானது உடலின் இரத்த ஓட்டத்தை மட்டுமின்றி, உடலின் பிற உறுப்புக்களையும் பாதிக்கிறது. சர்க்கரை நோய் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மோசமாக பாதிக்கும் அபாயம் உள்ளது.

ரத்ததில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிக அளவிலேயே இருந்தால், கண்கள், சிறுநீர்ப்பை, இதயம் போன்றவை செயலிழக்க நேரிடலாம் அல்லது ஏதேனும் பாதிப்பை உண்டாக்கலாம். என ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த துளசி நீர் மிகவும் நன்மை பயக்கும். இதன் மூலம் இயற்கையான முறையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் படிக்க | Bottle Gourd: இதய ஆரோக்கியம் முதல் நீரிழிவு நோய் வரை அருமருந்தாகும் சுரைக்காய்

நீரிழிவு நோயில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்த சிக்கலை ஏற்படுத்தாத இயற்கை  பொருட்களை உட்கொள்வதால், பக்க விளைவுகளை தடுக்க முடியும் என்பது சிறப்பு. அதோடு கூடவே சிறந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களை நோய்களிலிருந்து காத்துக் கொள்ளலாம்.

துளசி நீரால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும் என்பது சிலருக்கு  மட்டுமே தெரியும். எனவே துளசி நீரை எப்படி உட்கொள்ள வேண்டும் மற்றும் அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க, துளசி நீரை எடுத்துக் கொள்ளும் முறை

துளசி நீரால் இரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். இதற்கு நான்கைந்து துளசி இலைகளை தண்ணீரில் போட வேண்டும். இந்த தண்ணீரை அடுப்பில் சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். அதனை காலை அல்லது மாலையில் குடிக்கலாம். இது உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

துளசி தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மற்ற நன்மைகள்

1. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதோடு, எடையைக் கட்டுப்படுத்தவும் துளசி நீர் மிகவும் உதவியாக இருக்கும்.

2. துளசி நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று நோயிலிருந்து  உங்களை காத்துக் கொள்ள உதவுகிறது.

3. இந்த இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படுவது எல்லோருக்கும். எனவே உங்கள் உணவில் துளசி நீரை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதனால் மன அழுத்தம் நீங்கும்.

4. துளசி டீயும் மிகுந்த நன்மை தரும். இதன்  மூலம் பல ஆரோக்கியநன்மைகளையும் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு; இந்த மருந்தினால் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News