நீரிழிவு நோயாளிகள் இந்த காய்களை எப்போதுமே சாப்பிட கூடாது

Diabetes Control Tips: நீரிழிவு நோயாளிகள் பச்சை காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும், ஆனால் சில காய்கறிகளை நீரிழிவு நோயாளிகள் சாபிடக்கூடாது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 26, 2022, 07:37 AM IST
  • நீரிழிவு நோயாளிகள் சில காய்கறிகளை சாப்பிட கூடாது
  • எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது
  • இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் இந்த காய்களை எப்போதுமே சாப்பிட கூடாது title=

மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக, அனைத்து வகையான பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் மக்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், தனது ஆரோக்கியத்தை பராமரிக்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கலாம். 

இந்த நிலையில் இந்த நோயாளிகள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொண்டு, எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். எனவே, சர்க்கரை நோயாளிகள் எந்தெந்த காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

நீரிழிவு நோயாளிகள் இந்த காய்கறிகளை சாப்பிட கூடாது

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் பெரும்பாலான காய்கறிகள் அதன் கலவையில் சமைக்கப்படுகின்றன, ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் அளவு மிக அதிகமாக உள்ளது. இதனுடன், சிப்ஸ், பிரெஞ்ச் ஃப்ரைஸ், ஆலு டிக்கி போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

சோளம்
நோயாளிகள் சில காய்கறிகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் சில காய்கறிகளில் மாவுச்சத்து உள்ளது. உதாரணமாக, நீரிழிவு நோயாளிகள் சோளத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகளவில் இருக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் பீட்டா கரோட்டின் நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். 

பட்டாணி
உணவில் பட்டாணியைச் சேர்ப்பது அதன் சுவையை அதிகரிக்கிறது, ஆனால் இந்த காய்கறி கார்போஹைட்ரேட் மற்றும் ஸ்டார்ச் நிறைந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது, இதன் காரணமாக அதிலிருந்து விலகி இருப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகள் பட்டாணி சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. ஆகையால் பச்சை பட்டாணியை உங்கள் உணவில் சேர்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

துரித உணவு
ஃபாஸ்ட் ஃபுட் உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதன்படி நீரிழிவு நோயாளிகள் துரித உணவுகளில் இருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுக்கு எந்த விதமான நோய்களும் வராமல் இருக்க, ஆரோக்கியமான உணவுகளை உண்ண முயற்சி செய்யுங்கள்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News