இந்த குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க டிப்ஸ்!

ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முக்கியமானது தான் என்றாலும் அவற்றை நாம் சரிவிகிதத்தில் உண்ண வேண்டும்.  அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2022, 12:09 PM IST
  • குளிர்காலத்தில் ரத்த சர்க்கரையின் அளவில் மாறுபாடு ஏற்படும்.
  • கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.
இந்த குளிர்காலத்தில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க டிப்ஸ்! title=

நீரிழிவு நோயாளிகள் என்றாலே அவர்களது உடலில் ரத்த சர்க்கரையின் அளவு ஏற்ற இறக்கமாகவே தான் இருக்கும், இதனை கட்டுக்குள் வைத்திருப்பது நம் கையில் தான் உள்ளது.  பெரும்பாலான நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த குளிர்காலத்தில் ரத்த சர்க்கரையின் அளவில் மாறுபாடு ஏற்படும்.  அதற்கு காரணம் இந்த காலநிலையில் நீங்கள் போதுமான அளவு பயிற்சி செய்யாமலிருப்பதும், அதிகளவிலான கலோரிகளை உட்கொள்வதும் தான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  குளிர்காலத்தில் ஒருவரது ரத்த சர்க்கரையின் அளவை எப்படி கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்பது பற்றி இங்கே காண்போம்.

மேலும் படிக்க | பார்வையை கூர்மையாக்கும் வைட்டமின் A நிறைந்த ‘சில’ சைவ உணவுகள்!

1) புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவற்றிலிருந்து நமது உடல் அதுக்கு தேவையான ஆற்றலை எடுத்துக்கொள்கிறது.  இவை குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது, இதனால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.  மேற்கண்ட ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு முக்கியமானது தான் என்றாலும் அவற்றை நாம் சரிவிகிதத்தில் உண்ண வேண்டும்.  அதிலும் குறிப்பாக கார்போஹைட்ரேட்டுகள் ரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது.

2) பொதுவாக மன அழுத்தம் என்பது அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரு திறவுகோலாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.  மன அழுத்தம் இருந்தால் உடலில் குளுக்கோஸை அதிகப்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும்.  இது உங்கள் ரத்த சர்க்கரையின் அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.  அதனால் மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, யோகா, தியானம் மற்றும் புத்தகங்களை படிப்பது போன்றவற்றை செய்யலாம்.

3) வெப்பமான காலநிலையில் மக்கள் அதிகமாக தண்ணீரை உட்கொள்கின்றனர், ஆனால் குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் தண்ணீரை அதிகம் உட்கொள்வதில்லை. நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக நீரிழப்பு ஏற்படும் என்பதால் நீங்கள் உடலுக்கு போதுமான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது அவசியமாகும்.

4) நீண்ட நேரம் அமர்ந்திருப்பது, உடற்செயல்பாடுகளில் ஈடுபடாமல் சோம்பேறியாக இருப்பது போன்றவை உங்கள் உடலில் சர்க்கரை நோயை அதிகரித்துவிடக்கூடும்.  தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, உடற்பயிசிற்சி, ஓடுதல், ஏரோபிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதேனும் பயிற்சிகள் அல்லது உடற்செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

5) பொதுவாக குளிர்காலத்தில் காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, தொண்டை புண் போன்றவை ஏற்படும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும்.  அதனால் நீங்கள் இந்த காலங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வது, வெளியே செல்லும்போது கை, கால்களை சுத்தம் செய்து கொள்வது போன்ற செயல்களை செய்துகொள்வது நல்லது.

மேலும் படிக்க | நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை பாதுகாக்கும் ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News