நீரிழிவு நோயாளிகள் பலரும் தங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் போராடுகின்றனர். ஒரு நீரிழிவு நோயாளி தினமும் ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்வதன் அவரது சர்க்கரை அளவை நிர்வகிக்க முடியும். சர்க்கரை அளவை குறைக்க முழு தானியங்கள் மிகவும் உதவி புரிகிறது, இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் முழு தானியங்களை நாம் சாப்பிடும்போது இரத்தத்தில் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இப்போது நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய முக்கியமான ஆறு முழு தானியங்களை பற்றி இங்கே காண்போம்.
1) பார்லி: பார்லியில் பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பதோடு, உடலிலுள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
2) ஓட்ஸ்: இதில் கரையக்கூடிய நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் இரத்த குளுக்கோஸ் அளவை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3) தண்டு கீரை விதை: மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் தண்டு கீரை விதையில் அதிக புரதசத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமுள்ளது.
4) கேழ்வரகு: கடுகைப் போன்று இருக்கும் இது உடலிலுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மற்றும் சர்க்கரை நோய்க்கு சிறந்த பலனை தருகிறது.
5) தினை: குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட தினையில் அதிக நார்ச்சத்து நிறைந்துள்ளது.
இது மலச்சிக்கலை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
6) சோளம்: வைட்டமின் கே1 நிறைந்துள்ள சோளமானது இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதிலுள்ள பயோஆக்டிவ் பினாலிக் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், சர்க்கரை நோய் பாதிப்பை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க | விந்தணு குறைப்பாடா? No Worry இதை சாப்பிடுங்கள் போதும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ