நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சை உட்கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Diabetes Diet: நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடலாமா? இது பல நீரிழிவு நோயாளிகளுக்கு இருக்கும் கேள்வியாகும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 16, 2023, 09:30 PM IST
  • நீரிழிவு நோயாளிகள் திராட்சையை சாப்பிடலாமா?
  • இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த திராட்சை உதவுமா?
  • திராட்சையை இப்படி பயன்படுத்தவும்.
நீரிழிவு நோயாளிகள் உலர் திராட்சை உட்கொள்ளலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன?  title=

நீரிழிவு நோய்க்கான உலர் பழங்கள்: உலர்ந்த திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் உலர் பழம் தான் திராட்சை. இது சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். எடையைக் குறைக்கவும், செரிமானத்திற்கும் இது உதவுகிறது. ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் உலர் திராட்சையை சாப்பிடலாமா? இது பல நீரிழிவு நோயாளிகளுக்கு இருக்கும் கேள்வியாகும். இதை உட்கொண்டால் ஆபத்தா? எந்த வகையில் அதை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்? இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

நீரிழிவு நோயாளிகள் திராட்சையை சாப்பிடலாமா?

திராட்சை ஒரு பழ வகையாகும். மற்ற வகை பழங்களைப் போலவே, அவை இயற்கையான சர்க்கரையைக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் சர்க்கரை நோய் இருந்தாலும் திராட்சையை சாப்பிடலாம். ஆனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் இதை உட்கொள்ளலாம் என இதற்கு பொருள் அல்ல. நீரிழிவு நோயாளிகள் அதை கட்டுப்படுத்தப்பட்ட அளவில் உட்கொள்ளலாம். பொதுவாக, 2 டேபிள்ஸ்பூன் திராட்சையில் 15 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. உங்கள் உடலுக்கு இது போதும்.
 
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த திராட்சை உதவுமா?

திராட்சையை உணவு உட்கொண்ட பிறகு சாப்பிடுவது கிளைசெமிக் கட்டுப்பாட்டை கட்டுப்படுத்த உதவும். ஒரு ஆய்வில், திராட்சை கிளைசெமிக் கட்டுப்பாட்டை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் 10 பேரை (நான்கு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள்) மதிப்பீடு செய்தனர். ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் இரண்டு மணி நேரம் அவர்களின் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். வெள்ளை ரொட்டியை சாப்பிட்டதை விட, திராட்சையை சாப்பிட்ட பிறகு, அவர்களின் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் எதிர்வினை கணிசமாகக் குறைவாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். திராட்சைகள் கிளைசெமிக் பதிலில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று முடிவு செய்யப்பட்டது.
 
மேலும் படிக்க | குங்குமப்பூ பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதம், கட்டாயம் ட்ரை பண்ணுங்க

திராட்சையை இப்படி பயன்படுத்தவும்

நீங்கள் பல வழிகளில் திராட்சையை உட்கொள்ளலாம், இருப்பினும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை நீரைக் குடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சில திராட்சைகளை இரவில் ஊறவைத்து, காலையில் இந்த தண்ணீரை லேசாக சுடவைத்து குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனுடன், திராட்சையை ஏதேனும் சாலட் அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடலாம். ஸ்னாக்ஸாக, இவற்றை நட்ஸ், பாதாம் அல்லது முந்திரி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெருங்காயம்: இதை இப்படி பயன்படுத்தினால், 3 பிரச்சனைகள் ஆகும் மாயம், விவரம் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News