இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மூன்றாவது நபருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. உண்மையில், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் பெரும்பாலான மக்கள் இந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு சிந்திக்க வேண்டும், எனவே மலச்சிக்கல் எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி போன்றவற்றை நமக்கு தெளிவுபடுத்துகிறது இந்தக் கட்டுரை.
மலச்சிக்கல் ஏற்பட பொதுவான காரணங்கள் என்ன
* உணவு முறையில் மாற்றம்
* உடல் உழைப்பின்மை
* அதிக மனஅழுத்தம்
* பெருங்குடல் மிக மெதுவாக வேலை செய்தால், கழிவுப்பொருட்கள் அதிகநேரம் தங்கி மலம் இறுகிவிடுகிறது.
* குறைந்த நார்ச் சத்துள்ள உணவு சாப்பிடுவது
* தேவையான அளவு நீர் மற்றும் திரவ உணவுகள் அருந்தாமை
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
1. அதிகளவு தண்ணீர் குடிக்கவும்
உங்கள் உடலுக்கு தண்ணீர் மிகவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, நீங்கள் நாள் முழுவதும் 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அத்துடன் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் கோடை காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. நார்ச்சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவு முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதன்படி நார்ச்சத்து நிறைந்த பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். இதில் ஓட்ஸ், பார்லி, பட்டாணி, பீன்ஸ், பருப்பு, எலுமிச்சை மற்றும் ஆப்பிள் ஆகியவை அடங்கும்.
3. பாதாம் மலச்சிக்கலுக்கு தீர்வு தரும்
பாதாம் ஒரு ட்ரை ஃப்ரூட்டாகும், இதை உட்கொள்வதன் மூலம் அமிலத்தன்மை பிரச்சனையை ஏற்படாது. உண்மையில், பாதாமில் நிறைய ஆரோக்கியமான கொழுப்பு, புரதம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
4. ஆளிவிதை உதவும்
மலச்சிக்கலுக்கான ஒரு தீர்வாக இந்த ஆளிவிதை பயன்படுத்தப்படுகிறது. ஆளிவிதைகளில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. மலம் கழிக்கும் செயல்முறையை இது மேம்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர். மலச்சிக்கல் உள்ளவர்களில் மலம் உருவாவதை மேம்படுத்துவதற்கு ஆளிவிதை உதவுகிறது.
5. மலச்சிக்கலுக்கு உடற்பயிற்சி
ஆப்பிள்கள் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். மலச்சிக்கலுக்கு ஆப்பிள் சாறு உதவும் என்பதற்கான மற்றொரு காரணம், இதில் தேவையான அளவு பிரக்டோஸ் மற்றும் சார்பிட்டால் உள்ளது. இவை இரண்டும் இதில் உள்ளதால், ஆப்பிளை அதிக அளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றுப்போக்கைத் தூண்டும். குறிப்பாக, உணர்திறன் வாய்ந்த வயிறு கொண்ட ஒருவருக்கு.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR