இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளுக்கு இடையே, கோவிட் -19 தடுப்பு மருந்தை பெற இந்தியர்கள் 2022 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்று எய்ம்ஸ் இயக்குநரும், கோவிட் -19 மேலாண்மை தொடர்பான தேசிய பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு (Corona Virus) எதிரான உண்மையான தடுப்பூசி இந்திய சந்தையை அடைய ஒரு வருடத்திற்கும் மேல் ஆகும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா தெரிவித்துள்ளார்.
“நம் நாட்டில் மக்கள் தொகை மிக அதிகம்; காய்ச்சல் தடுப்பூசி போன்று, இந்த தடுப்பூசியை அனைவருக்கு கிடைக்கும் வகையில் சந்தையில் எவ்வாறு கொண்டு வர வேண்டும் என்பதைப் திட்டமிட எங்களுக்கு நேரம் தேவை. எனவே இது 2021 ஆம் ஆண்டின் இறுதி முதல் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாத்தியமாகும் என்று டாக்டர் குலேரியா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
டெல்லியில் COVID-19 தொற்று பாதிப்புகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது குறித்து பேசிய டாக்டர் குலேரியா, தேசிய தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன என்று கூறினார். “ஒன்று வானிலை. குளிர்கால காலங்களில் சுவாசம் தொடர்பான வைரஸ்கள் தாக்கம் அதிகரிக்கும் என்பதை எல்லோரும் அறிவோம்; இரண்டாவது டெல்லியில் குளிர் காலம் தொடங்கியுள்ளது. எனவே காற்றில் வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ அதிக வாய்ப்புகள் உள்ளன. மூன்றாவது காரணி காற்று மாசுபாடு. இதுவும் தொற்று பாதைப்பை அதிகரிக்கிறது, "என்று அவர் கூறினார்.
ALSO READ | இந்தியாவில் கேன்ஸர் மருந்துகள் விலை 90% குறைந்ததில் நோயாளிகளுக்கு ₹984 கோடி சேமிப்பு
இதற்கிடையில், இந்தியாவின் கோவிட் -19 தொற்று பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்தது, அதே நேரத்தில் கொடிய வைரஸ் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,68,968 ஆக உயர்ந்து தேசிய அளவில் குணமடையும் வீதம், 92.49 சதவீதமாக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
மொத்த கொரோனா வைரஸ் பாதிப்புகள், 85,07,754 ஆக அதிகரித்துள்ளன என்றும், கடந்த 24 மணி நேரத்தில் 45,674 நோய்த்தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும் சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 559 புதிய இறப்புகள் பதிவானதை தொடர்ந்து, மொத்த இறப்பு எண்ணிக்கை 1,26,121 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது. COVID-19 ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து பத்தாவது நாளாக 6 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது.
நாட்டில் 5,12,665 ஆக்டிவ் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் உள்ளன, இது மொத்த எண்ணிக்கையில் 6.03 சதவீதம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | Corona Side Effect: 40% நோயாளிகளுக்கு காதுகளில் buzzing ஒலி: UK ஆய்வு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR