Health Tips For Weight Loss: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் இனிப்பான ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டாம் என நினைப்பார்கள். இனிப்பான உணவுகளில் கலோரிகள் அதிகம் இருக்கும். அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. எனவே, சர்க்கரையை பெரியளவில் குறைக்க வேண்டும் என முயற்சியெடுப்பார்கள்.
அதாவது, காலை டீ - காபியில் சர்க்கரையை தவிர்ப்பது, இனிப்பு வகைகளை தவிர்ப்பது, ஜூஸில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது என பல விஷயங்களை உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கடைபிடிப்பார்கள். அதுவும் வெள்ளை சர்க்கரைக்கு பதில் இயற்கையாகவே இனிப்பு சுவை மிகுந்தவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள விரும்புவார்கள். தேன், நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கறுப்பட்டி போன்றவற்றை வெள்ளை சர்க்கரைக்கு பதில் உணவில் பயன்படுத்துவார்கள்.
இதில் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் வீடுகளில் மட்டுமின்றி டீக்கடைகளிலும் இடம்பெற தொடங்கிவிட்டது. மக்கள் வெள்ளை சர்க்கரை போட்ட டீ, காபியை காட்டிலும் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் கலந்த பானங்களை குடிக்க அதிக விரும்புகிறார்கள். அதிலும் குறிப்பாக உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நாட்டுச் சர்க்கரை, வெல்லத்தை அதிகம் பயன்படுத்துவார்கள். அப்படியிருக்க, இரண்டில் எது உடல் எடை குறைப்பில் அதிகம் நன்மையளிக்கும் என்பதை இங்கு காணலாம்.
நாட்டுச் சர்க்கரை
வெள்ளைச் சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரை உடல் எடை குறைப்பில் அதிக நன்மையை தரும். இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாஸியம் உள்ளிட்டவை அதிகம் இருக்கிறது. நாட்டுச் சரக்கரை உங்களின் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுவது மட்டுமின்றி வளர்ச்சிதை மாற்றத்தையும் தூண்டும்.
நாட்டுச் சர்க்கரையில் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருக்கிறது. இது அலர்ஜிகளை எதிர்க்கும். செரிமானத்தை மெதுவாக்கி இன்சுலின் அதிகமாவதை தடுக்கும். மேலும் உங்களுக்கு வயிற்றுக்கு ஹெவியான உணர்வை ஏற்படுத்தாது. உடல் எடை குறைப்பில் அதிகம் கைக்கொடுக்கும்.
வெல்லம்
வெல்லத்தில் வைட்டமிண்கள், கனிமங்கள் ஜோஸ்தி. அதாவது, பொட்டாஸியம், இரும்புச்சத்து, மேக்னீஸியம், கால்சியம், பாஸ்பரஸ், சோடியம் ஆகியவற்றுடன் வைட்டமிண் பி உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன. இவை வெள்ளை சர்க்கரையில் இருக்காது.
இதனால், வெல்லத்தை நீங்கள் பயன்படுத்தினால் வளர்ச்சிதை மாற்றம் தீவிரமாகும். இதனால் உடல் எடையை குறைப்பும் வேகமாகும். வெல்லத்தை சேர்த்துக்கொள்வதால் செரிமானமும் சீராக இருக்கும்.
நாட்டுச் சர்க்கரை vs வெல்லம்
இரண்டும் உடல் எடை குறைப்பில் உதவும் என்றாலும் வெல்லம்தான் உங்களுக்கு அதிகளவு நன்மையை அளிக்கும் எனலாம். ஏனென்றால், வெல்லத்தில் நாட்டுச் சர்க்கரையை ஒப்பிடும்போது Glycemic Index குறைவாக இருக்கிறது. Glycemic Index குறைவாக இருப்பதனால் செரிமானம் மெதுவாகி, இன்சுலின் அதிகமாவதை தடுக்கும்.
மேலும், வெல்லம் நாட்டுச் சர்க்கரை ஒப்பிடும்போது சற்று அடர்த்தியாக இருக்கும் என்பதால் குறைவான வெல்லத்தை சேர்த்தாலே உங்களுக்கு தேவையான இனிப்பு கிடைத்துவிடும். இதனால் குறைந்த கலோரியையே நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்.
குறைவான இனிப்பையும் எடுத்துக்கொண்டு, குறைவான கலோரிகளை எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறைப்பில் பெரிய முன்னேற்றம் காணலாம். நாட்டுச் சர்க்கரையையும் நீங்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தலாம். ஆனால், அதில் குறைவான ஊட்டச்சத்தும், அதிக Glycemic Index இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். இருப்பினும் நீங்கள் வெல்லத்தை அதிகம் எடுத்துக்கொள்வது உங்களுக்கு உடல் எடை குறைப்பு பயணத்தில் சிறப்பான முடிவுகளை கொடுக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் : ஆரம்ப அறிகுறி இந்த இடத்தில் தோன்றும்.. உஷார் மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ