மஞ்சள் தூள் பால் குடித்தால்... இத்தனை பிரச்னைகளா - முக்கியமா கர்ப்பிணிகள் நோட் பண்ணுங்க

Health Tips: மஞ்சள் தூள் பாலில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 1, 2025, 05:13 PM IST
  • பாலில் பலவகை ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
  • மஞ்சள் தூளை நாம் கிருமி நாசினியாக பயன்படுத்துவோம்.
  • இருப்பினும் இதில் சில பின்விளைவுகள் இருக்கின்றன.
மஞ்சள் தூள் பால் குடித்தால்... இத்தனை பிரச்னைகளா - முக்கியமா கர்ப்பிணிகள் நோட் பண்ணுங்க title=

Health Tips In Tamil: இந்த குளிர்காலத்தில் பலரும் உடல்நல பிரச்னைகளை சீராக்குவதற்கு பல நிவாரணிகளை எடுத்துக்கொள்வார்கள். உணவுகளில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். குளிர்காலத்தில் சூடான பானங்களை அருந்த அதிகம் விருப்பப்படுவார்கள். காலையில் எழுந்த உடன் சூடாக இஞ்சி டீ குடிப்பது, கடுங்காப்பி குடிப்பது; இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மிளகு பால், மஞ்சள் தூள் கலந்த பால், பனங்கற்கண்டு பால் உள்ளிட்டவற்றை அதிகம் விரும்புவார்கள். இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதற்கு மட்டுமின்றி தேவையான ஊட்டத்தை பெறவும் உதவிகரமாக இருக்கின்றன.

அப்படியிருக்க நம் நாட்டில் பெரும்பாலானோரின் வீட்டில் மஞ்சள் தூள் இல்லாமல் இருக்காது. நமது பெரும்பாலான உணவுகளில் மஞ்சள் தூள் சேர்க்கப்பட்டிருக்கும். அதேபோல் பாலும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் ஒன்று. அப்படியிருக்க பாலை நன்றாக காய்ச்சி அதில் சிறு அளவில் மஞ்சள் தூளை போட்டு, இனிப்புக்கு சர்க்கரை, பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை, வெல்லம், கறுப்பட்டி ஆகியவற்றில் விருப்பப்படும் ஒன்றை கலந்து குடிப்பார்கள். பெரும்பாலும் இதை இரவில் குடிக்கவே மக்கள் விரும்புவார்கள்.

பாலில் பலவகை ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. மஞ்சள் தூளை நாம் கிருமி நாசினியாக பயன்படுத்துவோம். காயமேற்பட்டாலோ, வீக்கம் ஏற்பட்டலோ வீட்டு வைத்தியமாக அந்த இடத்தில் மஞ்சள் வைத்து கட்டுவதை பார்த்திருப்போம். அப்பிடியிருக்க பாலையும், மஞ்சளையும் கலந்து குடித்தால் அது ஆரோக்கியமானதாக இருக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக உள்ளது. அதில் நன்மைகள் இருக்கிறது என்றாலும், இதை குடிப்பதால் சில உடல்நல பிரச்னைகளும் பின்விளைவாக வரலாம். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.

மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வெறும் 3 வாரங்களில் குறைக்க உதவும் எளிய டிப்ஸ்: கண்டிப்பா ட்ரை பண்ணுங்க

வயிற்றுக்கு பிரச்னையாகலாம்

நீங்கள் ஒருநாளில் ஒரு ஸ்பூனுக்கும் மேல் மஞ்சள் தூளை சேர்த்துக்கொண்டால், அது உங்கள் வயிற்றுக்கு பிரச்னையை உண்டாக்கும். குறிப்பாக, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னை இருப்பவர்கள் மஞ்சள் தூள் கலந்த பாலை அருந்த வேண்டாம். இதில் உள்ள ஆக்ஸலேட் (Oxalate) கால்சியம் கரைவதற்கு பிரச்னையாக இருக்கும். வெயில் காலத்தில் மஞ்சளை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள் கவனத்திற்கு...

நீரிழிவு பிரச்னைகள் இருப்பவர்கள் உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை மோசமாகலாம். அப்படியிருக்க நீரிழிவு நோயாளிகளுக்கு மஞ்சள் பிரச்னைக்குரியதாகும். இதனை சாப்பிடுவதால் அவர்களுக்கு மூக்கில் இருந்து ரத்தம் வரும் பிரச்னை வர வாய்ப்புள்ளது.

கல்லீரலுக்கும் பிரச்னை

அதிகமாக மஞ்சள் தூள் கலந்த பாலை குடிப்பதன் மூலம் கல்லீரலில் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது. அதிகம் சூடாக அந்த பானத்தை குடிப்பது கல்லீரலுக்கு பிரச்னைக்கு உள்ளாக்கலாம். உங்களின் கல்லீரல் ஏற்கெனவே பலவீனமாக இருந்தால் இதை குடிப்பதை நிறுத்துவது நல்லது.

கர்ப்பிணிகள் பெண்கள் தொடவே கூடாது

மஞ்சள் தூள் உடலில் சூட்டை அதிகரிக்கும். மேலும் இது வயிற்றில் அதிக சூட்டை உண்டு பண்ணும். எனவே கர்ப்பிணி பெண்கள் இதை தவிர்க்க வேண்டும். இது கருக்கலைப்புக்கு கூட வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த எழுதப்பட்டவை ஆகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும் என்பதை வாசகர்கள் மறக்க வேண்டாம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | வேலை காரணமாக காலை உணவை தவறவிடுகிறீர்களா? இந்த பாதிப்பு ஏற்படலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News