எச்சரிக்கை... இந்த காய்கறிகளை அதிகமாக வேக வைத்தால் சத்துக்கள் காலியாகும்

Side Effects of Overcooking: காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது அவற்றின் சுவையை அதிகரிக்கின்றன. மேலும் செரிமானமும் எளிதாகும். ஆனால் சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2024, 06:36 PM IST
  • காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது செரிமானம் எளிதாகும்.
  • காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது அவற்றின் சுவையை அதிகரிக்கின்றன.
  • அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் ஊட்டச்சத்துக்களை இழக்கும் காய்கறிகள் எவை?
எச்சரிக்கை... இந்த காய்கறிகளை அதிகமாக வேக வைத்தால் சத்துக்கள் காலியாகும் title=

காய்கறிகளை சமைத்து சாப்பிடுவது என்பது நாம் எல்லாரும் பின்பற்றும் முறை தான். காய்கறிகளை சமைத்து சாப்பிடும் போது அவற்றின் சுவையை அதிகரிக்கின்றன. மேலும் செரிமானமும் எளிதாகும். ஆனால் சில காய்கறிகளை அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் அல்லது அளவிற்கு அதிகமாக சமைத்தால், அதன் ஊட்டச்சத்துக்கள் அழிந்து விடும். இதனால் உடலுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் போகலாம். அளவிற்கு அதிகமாக வேக வைத்தால் ஊட்டச்சத்துக்களை இழக்கும் (Side Effects of Overcooking) காய்கறிகளை அறிந்து கொள்ளலாம். 

ப்ரோக்கோலி (Broccoli)

ப்ரோக்கோலி கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் கே ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ள அற்புதமான காய்கறி. ஆனால் ப்ரோக்கோலியை அளவிற்கு அதிகமாக சமைத்தால், அதில் உள்ள வைட்டமின் சி அழிந்து விடும். எனவே ப்ரோக்கோலியை தேவை அளவு மட்டுமே சமைக்க வேண்டும்.

காலிஃபிளவர் (Cauli Flower)

ப்ரோக்கோலியைப் போலவே, காலிஃபிளவரையும் அதிகமாகச் சமைப்பதால் ஊட்டச்சத்துகள் (Health Tips) இழக்கப்படுகின்றன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளை அதிகம் வேக வைப்பதால் வைட்டமின் சி சத்தினை இழந்து விடுவோம்.

கீரை (Spinach)

கீரை இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் வளமான மூலமாகும். ஆனால் கீரையை அதிக அதிகமாக வேக வைத்தால் கீரையில் உள்ள வைட்டமின் சி அழிந்து விடும். கீரையில் உள்ள வைட்டமின் சியை பெற விரும்பினால், அதை சரியான அளவில் வேகவைக்கவும் அல்லது குறைந்த தீயில் சிறிது சமைக்கவும். கீரையை திறந்த பாத்திரத்தில் மூடி போடாமல் வேகவைப்பதால் பசுமை மாறாமல் இருக்கும்.

மேலும் படிக்க | Osteoporosis... எலும்பு மெலிதல் நோயை தடுக்கும்... கால்சியம் நிறைந்த சில சூப்பர் உணவுகள்

கேரட் (Carrot)

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்தின் முழுப் பலனையும் பெற விரும்பினால், அதை சமைத்து சாப்பிடுவதற்குப் பதிலாக, சாலட்டில் பச்சையாகவோ அல்லது பச்சடியில் துருவி பயன்படுத்துவதோ அல்லது லேசாக வேகவைத்தோ சாப்பிடுவது சிறப்பு.

குடைமிளகாய் (Capsicum)

குடமிளகாயில் வைட்டமின் சி நிறைந்துள்ள நிலையில், அதனை அளவிற்கு அதிகமாக வேக வைக்கும் போது, ​​அதிலுள்ள வைட்டமின் சி சத்து அழிந்து விடும். இதன் காரணமாக, குடைமுளகாயை பச்சையாகவோ அல்லது சிறிது சமைத்தோ சாப்பிடுவது எப்போதும் சிறந்தது.

தக்காளி (Tomato)

சமைத்த தக்காளியை சாப்பிடுவதானல் அதிலுள்ள லைகோபீனின் நன்மைகளை அதிகரிக்கிறது. ஆனால், அளவிற்கு அதிகமாக வேக வைப்பதால் வைட்டமின் சி சத்து அழிந்து விடும். எனவே, சிறிதளவு தக்காளியை பச்சையாக சாப்பிடுவதனால் உடலுக்கு வைட்டமின் சி நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும்.

பச்சை பட்டாணி (Green Peas)

பச்சைப் பட்டாணியில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளது. தவிர, இதில் நார்ச்சத்தும் அதிகம். பெரும்பாலானோருக்கு பட்டாணியை வேகவைத்து சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் அளவிற்கு அதிகமாக வேகை வைப்பதன் மூலம், அவற்றில் உள்ள வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்து அழிந்து விடும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் வெள்ளரியும் வில்லனாகும்: வெள்ளரிக்காயின் பக்க விளைவுகள் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News