சாதாரணமாக பலருக்கு கால் நரம்புகளில் ரத்தக் கட்டிகள் உருவாகும். ஆனால் இதயத்திலும் ரத்தக் கட்டிகள் உருவாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இதயத்தில் ரத்தம் உறைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. மேலும், இதயத்தில் ரத்தக் கட்டிகள் ஏற்படுவது என்பது மிகவும் அரிதானவையும்கூட.
இதயத்தில் ரத்தக் கட்டிகள் உருவாகும்போது, அது ரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதன் விளைவாக, நோயாளிக்கு மாரடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலையை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதயத் தமனிகளில் உருவாகும் ரத்தக் கட்டிகளும் நோயாளியின் உடலில் ரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன. பிரச்சனை தீவிரம் கடுமையாகும்போது நோயாளி இறக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் படிக்க | இதய நோயின் தீவிர அறிகுறிகள் - அலட்சியமாக இருக்காதீர்கள்
இதயத்தில் ரத்த உறைவுக்கான காரணங்கள்
1. தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்தல்
2. அதிகப்படியான புகைபிடித்தல்
3. இதயம் தொடர்பான நோய்கள்
4. உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலையின்மை
இதயத்தில் இரத்தக் கட்டிகளின் அறிகுறிகள்
1. நெஞ்சு வலி
2. சுவாசிப்பதில் சிரமம்
3. கைகள், முதுகு மற்றும் கழுத்தில் வலி
4. மாரடைப்பு
5. திடீர் தலைசுற்றல்
6. நடக்கும்போது தடுமாற்றம்
7 . எந்த காரணமும் இல்லாமல் கடுமையான தலைவலி
இதயத்தில் ரத்தக் கட்டிகளின் அறிகுறிகள் தோன்றிய உடனேயே சிகிச்சை தேவைப்படுகிறது. நோயாளியின் நிலையைப் பரிசோதித்த பிறகு, அதன் தன்மையைப் பொறுத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். ஆரம்பத்தில் ரத்த தட்டுக்கள் மற்றும் ரத்தம் பரிசோதநனை மேற்கொள்ளப்படும். இதற்குப் பிறகு சில மருந்துகளால் இந்தப் பிரச்சனையை குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சிப்பார்கள். பிரச்சனை கடுமையாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ராலைக் குறைக்க, இதை கட்டாயம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR