Bizarre Corona: புரளியை நம்பி எலுமிச்சை சாறால் உயிர்விட்ட ஆசிரியர்

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், புரளிகளும் வதந்திகளும் ஏற்படுத்தும் சோகங்களுக்கும் பஞ்சமேயில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 1, 2021, 12:11 PM IST
  • புரளியை நம்பி எலுமிச்சை சாறால் உயிர்விட்ட ஆசிரியர்
  • எலுமிச்சை பழத்தைக் கொண்டு எப்படி கொரோனாவை குணமாக்கலாம் என்ற வீடியோ ஒன்று வைரலானது.
  • புரளிகளும் வதந்திகளும் ஏற்படுத்தும் சோகங்களுக்கும் பஞ்சமேயில்லை
Bizarre Corona: புரளியை நம்பி எலுமிச்சை சாறால் உயிர்விட்ட ஆசிரியர்  title=

நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகிவரும் நிலையில், புரளிகளும் வதந்திகளும் ஏற்படுத்தும் சோகங்களுக்கும் பஞ்சமேயில்லை.

கொரோனாவை கட்டுப்படுத்த உதவி குறிப்புகள் என்ற பேரில் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல புரளிகள் அன்றாடம் கிளப்பி விடப்படுகின்றன. அதில் ஒன்று தான்'எலுமிச்சை தெரபி'. எலுமிச்சை பழத்தைக் கொண்டு எப்படி கொரோனாவை குணமாக்கலாம் என்ற வீடியோ ஒன்று வைரலானது. 

இந்த வீடியோவை கர்நாடக மாநில பாஜக முன்னாள் எம்.பி.யும், வி.ஆர்.எல். போக்குவரத்து நிறுவன உரிமையாளருமான விஜய் சங்கேஸ்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து, '' நானும் இதை முயற்சித்திருக்கிறேன். மூக்கில் 2 சொட்டு எலுமிச்சை சாறு விட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்''என்று குறிப்பிட்டுருந்தார்.

Also Read | எலுமிச்சைப் பழத்தின் 5 மகத்தான நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

இதுபோன்ற வீடியோ புரளிகளை நம்பும் சிலர் அதை முயற்சித்துப் பார்த்து உயிருக்கே உலை வைத்துக் கொள்கின்றனர். ரெய்ச்சூர் அருகேயுள்ள சிந்தானூரை சேர்ந்த ஆசிரியர் 42 வயது பசவராஜ் நேற்று முன் தினம் தனது மூக்கில் எலுமிச்சை சாறு விட்டுள்ளார். 

மூக்கில் எலுமிச்சைச் சாறு விட்ட சில நிமிடங்களில்  வாந்தி ஏற்பட்டு மயங்கி விழுந்த பசவராஜை குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பசவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வதந்தியே, ஒரு ஆசிரியரின் உயிருக்கு உலை வைத்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | COVID Cases Spike: இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் கோவிட் பாதிப்பு

எலுமிச்சையில் அதிக அளவிலான காலிசியம், ஃபோலிக் அமிலம் உள்ளது. இவை தாகத்தை போக்கும், பலவித மருத்துவ குணங்கள் நிறைந்துல்லது என்றாலும், அமிர்தமே விஷமாக மாறுவது என்பதும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயமாகும்.

எலுமிச்சையில் புளிப்பு சத்து அதிகமாக இருக்கும் என்பதால் அதனை தண்ணீஇரில் கலநது தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரீல் சேர்த்து பருகுவது நலம் கொடுக்கும். ஆனால் சிறுநீரகத்தில் கல் மற்றும் பிற பிரச்சனைகள், அல்சர் உள்ளவர்கள் எலுமிச்சையை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.  

கொரோனாவை வென்றெடுப்பதற்கு பல வழிகள் உள்ளன. அதை அறிவுபூர்வமாகவும் விஞ்ஞானரீதியாகவும் முன்னெடுக்கவேண்டும். தயவு செய்து புரளிகளையும் வதந்திகளையும் பரப்பி யாரும் மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்.

Also Read | குஜராத் மருத்துவமனை கோர தீ விபத்தில் குறைந்தது 18 கோவிட் நோயாளிகள் பலி

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News