கிரெடிட் கார்டு பயனர்களே... இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு - ஜூலையில் வரும் மாற்றங்கள்

இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் விரிவாக காணலாம்.

  • Jun 27, 2024, 18:25 PM IST
1 /8

இந்தியாவில் வரி மற்றும் நிதி சார்ந்த மாற்றங்களில் அவ்வப்போது மாற்றம் வருவது இயல்பே. அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் எல்பிஜி போன்ற சில முக்கிய விஷயங்களில் சிறு மாற்றங்கள் ஏற்படும்.    

2 /8

இந்நிலையில், மக்களவை தேர்தல் நிறைவடந்து பின்னர் புதிய ஆங்கில மாதம் பிறக்க இருப்பதால் ஜூலை மாதத்தை பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அந்த வகையில் ஜூலையில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட சில நிதி சார்ந்த மாற்றங்களை இங்கு காணலாம்.   

3 /8

Paytm Wallets: 2024ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி வரை Paytm Wallets பயன்படுத்தப்படாமல், எவ்வித பரிவர்த்தனையும் இன்றி, கணக்கில் பணமும் இன்றி இருந்தால் அந்த கணக்கு முடக்கப்படும்.     

4 /8

SBI Credit Cards: எஸ்பிஐயின் 22 கிரெட் கார்டுகளின் மூலம் அரசு சார்ந்த பண பரிவர்த்தனைகளை மேற்கொண்டால், அதில் Reward Points-ஐ பயன்படுத்த முடியாது. இது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்.

5 /8

ICICI Credit Cards: ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டுகளுக்கு வரும் 2024ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் சில மாற்றங்களை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது. அனைத்து கார்டுகளிலும் கார்டை மாற்றுவதற்கான கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாய்க்கு மாற்றப்படுகிறது. Emerald Private Metal Credit Card-க்கு மட்டும் இது பொருந்தாது.   

6 /8

ITR Filing: நீங்கள் மாதச் சம்பளம் வாங்கும் நபராக இருக்கும்பட்சத்தில், ஜூலை 31ஆம் தேதிக்குள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திட வேண்டும். ஜூலை 31ஆம் தேதிக்கு பின்னர் காலக்கெடு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது. நீங்கள் தாக்கல் செய்ய தவறவிட்டால் ஒருவேளை காலக்கெடு நீட்டிக்கப்படாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடலாம்.  

7 /8

Citi Bank: சிட்டி பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களின் அனைத்து வகையான கணக்குகளையும், வசதிகளையும் ஆக்சிஸ் வங்கிக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, வரும் ஜூலை 15ஆம் தேதிக்குள் நிறைவடைய உள்ள கிரெடிட் கார்டுகளையும், ஆக்ஸிஸ் வங்கிக்கு மாற்ற வேண்டும்.  

8 /8

PNB Cards: அனைத்துவகை RuPay பிளாட்டினம் டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் Lounge அணுகல் திட்டத்தில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது, Punjab National Bank. புதிய விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உள்நாட்டு விமான நிலையம் / ரயில் நிலையம் லவுஞ்ச் அணுகல் சந்தா ஒரு காலாண்டுக்கு பிடித்தம் செய்யப்படும். அதேபோல், சர்வதேச விமான நிலைய லவுஞ்ச் அணுகல் ஆண்டுக்கு ஒருமுறை பிடித்தம் செய்யப்படும்.