இரத்த சோகைக்கு நிவாரணம் அளிக்கும் அட்டகாசமான உணவு வகைகள்

Iron Rich Foods To Cure Anemia: பொதுவாக, இரத்த சோகை புகார் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 10, 2024, 12:48 PM IST
  • இரத்த சோகை ஒரு தீவிர பிரச்சனையாகும்.
  • உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இது ஏற்படுகிறது.
  • இதனால் உடலில் இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
இரத்த சோகைக்கு நிவாரணம் அளிக்கும் அட்டகாசமான உணவு வகைகள் title=

Iron Rich Foods To Cure Anemia: இந்த நாட்களில் பலர் இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இரத்த சோகை ஒரு தீவிர பிரச்சனையாகும். உடலில் இரும்புச்சத்து குறைபாடு காரணமாக இது ஏற்படுகிறது. இதனால் உடலில் இன்னும் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. 

இரத்த சோகை காரணமாக, எப்போதும் சோர்வான உணர்வு, தலைவலி, பசியின்மை, எரிச்சல், முடி உதிர்தல், பலவீனமான நகங்கள், மூச்சுத் திணறல், வாய் புண், நிற்கும்போது மயக்கம், பாலுணர்வு இல்லாமை போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இவை வழக்கான, ஆரோக்கியமான உடல் செயல்பாட்டுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.

பொதுவாக, இரத்த சோகை பிரச்சனை 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. நமது உடலின் சரியான செயல்பாட்டிற்கு இரத்தம் மிகவும் முக்கியமானது. இதன் மூலமாகத்தான் ஆக்ஸிஜன் அனைத்து பாகங்களையும் சென்றடைகிறது. ஆகையால், இரும்புச்சத்து குறைபாட்டை நீண்ட நாட்களுக்கு புறக்கணித்துக்கொண்டு இருப்பது நல்லதல்ல. சில இயற்கையான வழிகளில் இரும்புச்சத்து குறைப்பாட்டை சரி செய்து இரத்த சோகை பிரச்சனையிலிருந்து நிவாரணம் காணலாம். இரத்த சோகை அறிகுறிகள் உள்ளவர்கள் உணவில் சில முக்கிய விஷயங்களைச் சேர்த்துக்கொள்வது, அதைச் சமாளிக்க பயனுள்ளதாக இருக்கும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.

பீட்ரூட்

பீட்ரூட் ஒரு சக்திவாய்ந்த இரும்புச்சத்து நிறைந்த காய். இதில் இரும்புச்சத்து மட்டுமின்றி, ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் அதிகமாக உள்ளன. தொடர்ந்து பீட்ரூட்டை உட்கொண்டு வந்தால், இரத்த ஓட்டம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை எளிதாக அதிகரிக்கலாம். இதை சாலட், கறி, ஜூஸ் என பல வழிகளில் உட்கொள்ளலாம்.

சிவப்பு ராஜ்மா

சிவப்பு ராஜ்மாவில் புரதச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. சைவ உணவு உண்பவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டை சமாளிக்க இது சிறந்த வழியாக இருக்கும். ஏனெனில் இதில் தாவர அடிப்படையிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் உள்ளன. சப்பாத்தி அல்லது சாதத்துடன் ராஜ்மா உட்கொள்வது இரத்தத்தில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்கும்.

மேலும் படிக்க | LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் கொண்ட... சில சிறந்த உணவுகள்

வெல்லம்

வெல்லம் இயற்கையான இனிப்பு சுவை கொண்டது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் இரத்த சோகையிலிருந்து நிவாரணம் கிடைக்கும். வெல்லத்தை தேநீரில் சேர்த்தோ அல்லது காலை உணவுடனோ தினமும் உட்கொள்ளலாம். இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், ஆற்றலையும் அளிக்கின்றது.

மாதுளை

மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பழத்தில் இரும்புச்சத்து மட்டுமின்றி, அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இதை சாறு வடிவிலும் உட்கொள்ளலாம்.

சிவப்பு கேப்சிகம்

சிவப்பு கால்சியத்தில் இரும்புச் சத்தின் அளவு மற்றவற்றுடன் ஒப்பிடும்போது மிக அதிகமாக இல்லாவிட்டாலும், இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது தாவரங்களிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்க உதவுகிறது. இதனை பச்சையாகவோ, வதக்கியோ, வேகவைத்தோ அல்லது பல்வேறு உணவு வகைகைகளாகவோ சமைத்து சாப்பிடலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | எலும்புகளை சல்லடையாக்கும் வைட்டமின் டி குறைபாடு.... ஈடு செய்ய உணவில் சேர்க்க வேண்டியவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News