Health Tips: தலை முதல் கால் வரை வாழைப்பழத் தோலால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

வாழைப்பழம் சாப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தோலை தூக்கி எறிகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தின் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது நீங்கள் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 7, 2021, 03:07 PM IST
  • வாழைப்பழத் தோல் வெயிலால் சருமத்தில் ஏற்படும் எரிச்சல், நமைச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
  • சருமத்தில் நீரோட்டத்தை அதிகரிக்க வாழைப்பழத் தோல் மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது.
  • முகப்பரு வடுக்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும்.
Health Tips: தலை முதல் கால் வரை வாழைப்பழத் தோலால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்  title=

Health Benefits of Banana peel: வாழைப்பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள பழங்களாகும். ஏழைகளும் எளிதாக வாங்கக்குடிய இந்த பழங்களில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் சி போன்ற ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளன. 

வாழைப்பழம் (Banana) சாப்பிடும்போது, ​​பெரும்பாலான மக்கள் தோலை தூக்கி எறிகிறார்கள். ஆனால், வாழைப்பழத்தின் தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இவற்றைப் பற்றி தெரிந்துகொண்டவுடன் அடுத்த முறை வாழைப்பழம் சாப்பிடும்போது நீங்கள் கண்டிப்பாக தோலை தூக்கி எறிய மாட்டீர்கள்.

வாழைப்பழத் தோலால் நம் சருமத்துக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கே காணலாம்: 

1. வாழைப்பழத் தோலை உங்கள் சருமத்தில் தேய்த்துக்கொண்டால் சருமம் பிரகாசமாகும், சுருக்கங்கள் குறையும்.
2. கண் வீக்கம் அல்லது வலி இருந்தால், கண்களை மூடி, அதன் மேல் வாழைப்பழத் தோலை வைத்துக்கொண்டால் நிவாரணம் கிடைக்கும். 
3. சருமத்தில் நீரோட்டத்தை (Skin Care) அதிகரிக்க வாழைப்பழத் தோல் மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது.
4. முகப்பரு வடுக்கள் மீது வாழைப்பழத் தோலை தேய்த்தால் வடுக்கள் நீங்கும், சருமம் மிருதுவாகும். 
5. சோரியாசிஸ் அதாவது தடுப்புத் தோல் பிரச்சனை உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும். இது ஈரப்பதத்தை அளித்து நமைச்சலையும் தடுப்புத் தன்மையையும் நீக்கும். 
6. மருவை அகற்ற, ஒரு பழுத்த வாழைப்பழத் தோலை அதன் மேல் வைத்து, ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விட வேண்டும்.

ALSO READ: Drinking Hot Water: வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

வாழைப்பழத்தோலில் அதிக பீனாலிக்ஸ் இருக்கின்றன என்றும் இவற்றில் அதிக ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டியாக்சிடெண்ட் பண்புகள் உள்ளதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன என்றும் 2018 ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழத் தோலில் கரோட்டினாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் போன்ற பல பயோஆக்டிவ் கலவைகள் உள்ளன. இவற்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

கூந்தல் பராமரிப்பு: 

வாழைப்பழத்தை கூந்தலுக்கான ஒரு மாஸ்காக பயன்படுத்தலாம் என கூந்தல் ஆரோக்கிய நிபுணர்கள் கருதுகிறார்கள். இது கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் ஆக்க உதவுகிறது. 

பற்களை வெண்மையாக்குவதற்கு வாழைப்பழத் தோல் உதவுகிறது: 

2015 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி, வாழை தோல்கள் ஆக்டினோமைசெட்டெம்கிமிட்டன்ஸ் மற்றும் ஜிங்கிவாலிஸுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டுள்ளன. இந்த பாக்டீரியாக்கள் ஈறு வீக்கம் மற்றும் பீரியண்டோன்டிடிஸ் போன்ற பீரியண்டால்ட் நோய்களுக்கு வழிவகுக்கின்றன். வாழைப்பழத் தோலை பற்களில் தேய்ப்பது பற்களை (Dental Care) வெண்மையாக்குவதோடு ஈறுகளையும் வலுப்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. 

முதலுதவிக்கு வாழைப்பழத் தோல் உதவுகிறது 

வாழை தோல்களில் ஆண்டிமைக்ரோபையல், ஆண்டியாக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் இவை முதலுதவிக்கு பெரிதும் உதவுகின்றன என நாட்டுப்புற மருத்துவத்தில் உறுதியாக நம்பப்படுகின்றது:

1. வெயிலால் (Summer) சருமத்தில் ஏற்படும் எரிச்சல், நமைச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கவும், பூச்சிக்கடிக்கும், விஷக்கடிகளுக்கும், சிறு கொப்பளங்களுக்கும் வாழைப்பழத் தோல் நல்ல நிவாரணமாக இருக்கும். 

2. உறைந்த வாழைப்பழத்தோலை நெற்றியிலும் கழுத்தின் பின்புறத்திலும் வைப்பதால் தலைவலி குறையும். 

3. தோலில் சிறு பிளவு ஏற்பட்டால், அந்த இடத்தில் ஒரு வாழைப்பழத் தோலை 15 நிமிடங்களுக்கு வைத்திருந்தால், சருமத்தின் மேற்பரப்பில் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

ALSO READ: Foods:வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வரும் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News