Burn Belly Fat: இன்றைய வழ்க்கை முறை காரணமாக தொப்பை என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகி விட்டது. உடல் மெலிதாக இருக்கும் சிலருக்கு கூட தொப்பை விழுவதை காணலாம். நவீன வாழ்க்கை முறையில், குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதே இலாத நிலையில், தொப்பை விழுவதை தடுக்க முடிவதில்லை என்பது தன் நிதர்சனமான உண்மை.
வயிற்றின் உள் உறுப்புகளை பாதுகாக்கும் வகையில் உடலோடு ஒட்டியிருந்தால் தான் அது வயிறு. அதுவே விரிந்து அளவுக்கு மிஞ்சி அதிகமாகும் போது தொப்பை என்றாகிறது.
தொப்பை கரைய தொடர்ந்து முயற்சி செய்தாலும், சிலருக்கும் விரும்பிய பலன் கிடைப்பதில்லை. என்ன செய்தாலும் தொப்பை கரையவில்லையே என வருந்துபவர்களுக்கு இந்த செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டிருக்கு கிரீன் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், தொப்பை வெண்ணெய் போல் கரையும்.
கடுமையான உடற்பயிற்சி மட்டுமே செய்தால் தொப்பை குறையாது. உடற்பயிற்சியுடன் உங்கள் உணவு பழக்கங்கள் இரண்டையும் ஒன்றாக செய்யும் போது நிச்சயம் தொப்பை குறையும்
உடல் எடை அதிகரிப்பு நோய்களுக்கு அடிப்படைஎன்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. எடை அதிகரிப்பு பல தீவிர நோய்களின் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. உடல் எடை காரணமாக நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றின் ஆபத்து அதிகரிக்க தொடங்குகிறது.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
இது தவிர முதுகுவலி, வயிற்று வலி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளும் தலைதூக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள மேஜிக் ட்ரிங்கை தினமும் குடித்து வந்தால் தொப்பை கொழுப்பு வேகமாக குறையத் தொடங்கும்.
கோடையிலும் குளிர்ச்சி தரும் புதினா
கோடை காலம் துவங்கி விட்டதால், குளிர்ச்சியை தரும் புதினாவை அதிகம் உட்கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். இது ஆயுர்வேதத்தின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. புதினாவில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன.
அதே போல் இதன் குளிர்ச்சியான தன்மை காரணமாக, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. புதினா சாப்பிடுவதால் வயிற்று வலி, அமிலத்தன்மை மற்றும் புளித்த ஏப்பம், நென்சு எரிச்சல் போன்றவற்றில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடையை குறைக்கும் புதினா நீர்
உங்கள் உடல் எடை வேகமாக குறைய வேண்டுமென்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் சில புதினா இலைகளை போட்டு, கருப்பு உப்பு, கருப்பு மிளகு பொடியை சேர்த்து, இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வர, தொப்பை கொழுப்பு கரைய ஆரம்பிக்கும். .
புதின நீரின் பிற நன்மைகள்
புதினா நீரை குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல வகையான தொற்று நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது தவிர, மலச்சிக்கல், கோடையில் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் உள்பட பல கோடைகால பிரச்சனைகளில் இருந்தும் காக்கிறது
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR