பீட்ரூட் பல சத்துக்கள் கொண்ட காய் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், பீட்ரூட்டில் இருக்கும் அனைத்து ஊட்டச்சத்துக்களும், அதன் இலைகளிலும் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக பீட்ரூட்டை பயன்படுத்தும் நாம், அதன் இலையை வீணடித்து விடுவோம்.
ஃபோலாசின், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, பொட்டாசியம் (potassium), மாவுச்சத்து (starch), இரும்புச்சத்து (iron), வைட்டமின் 12 என பல சத்துக்கள் பீட்ரூட்டிலும், அதன் கீரையிலும் அதிகம் நிறைந்து உள்ளன.
வைட்டமின் 12 ரத்த அணுக்களின் உற்பத்திற்கு தேவைப்படும் சத்து, இது பீட்ரூட்டில் அபாரமாக இருக்கிறது. எனவே, பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த அணுக்களின் அளவு சீராக இருக்கும்.
Also Read | சூப்பரான வெள்ளரிக்காய்ப் பாயசம் செய்வது எப்படி? இப்படித்தான்…
சிலருக்கு பீட்ரூட்டை காயாக சாப்பிட பிடிக்காது. ஆனால், பீட்ரூட்டை ஜூஸாக செய்து குடித்தால், எல்லா சத்துக்களும் உடலில் சென்று சேரும்.
பீட்ரூட்டை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதில் என்ன நன்மை? அதில் இருக்கும் நைட்ரிக் ஆக்சைடு, ரத்த நாளங்களை நன்கு விரிவடைய செய்து, தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. எனவே, பீட்ரூட்டை ஆண்கள் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், ஆண்மை அதிகரிக்கும்.
தொடர்ந்து பீட்ரூட் ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொள்வதற்கு பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.
Also Read | Danger! வீட்டைச் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பொருட்களால் ஆபத்து!
இதனால் இரண்டு நன்மை. ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதும், ஆண்களின் ஆண்மை குறைவிற்கு காரணமாக அமையும். எனவே, பீட்ரூட் ஜூஸை எடுத்துக் கொண்டால், ஆண்மை குறைவு பிரச்சனை வராமல் இருக்கும்.
பீட்ரூட் ஜூஸ் செய்வதும் சுலபமே. பீட்ரூட், இஞ்சி, ஆப்பிள், சிறிது புதினா இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொண்டு பிறகு அதில் எலுமிச்சைச் சாறு சேர்த்து அருந்தலாம்.
தினசரி ஒரு கிளாஸ் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும், புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும்.
Also Read | Ayurvedic Agni Tea: அக்னி தேநீர் இருக்கும்போது வேறு டீ எதற்கு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR