காலை, மாலை, இரவு என எந்த நேரத்திலும் டீயை விரும்பி குடிப்பவர்கள் பலர் உள்ளனர். வெறும் டீ மட்டும் குடிக்காமல் அதனுடன் பிஸ்கட், பக்கோடா, சமோசா, வடை என பலவற்றை விரும்பி சாப்பிடுகின்றனர். இரண்டு உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது அதன் காம்பினேஷன் சரியாக இல்லை என்றால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். அதே போல டீயுடன் சில உணவுகளை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்தில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக வறுத்த உணவுகள் மற்றும் இனிப்புகளை டீயுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. காலையிலும், மாலையிலும் டீ குடிக்கும் போது எந்த எந்த உணவுகளை அதனுடன் சேர்த்து சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
டீ குடிக்கும் போது பிஸ்கட், கேக் மற்றும் சாக்லேட் போன்ற இனிப்பு பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் டீயில் சர்க்கரை சேர்க்கப்படுகிறது. அதனுடன் மேற்கொண்டு இனிப்பு உணவுகளை சேர்த்து சாப்பிடுவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகப்படுத்தும். இதனால் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகிறது. அதிகப்படியான டீ மற்றும் பிஸ்கட் சாப்பிடுவது இன்சுலின் எதிர்ப்பு, பிபி, வயிற்று கொழுப்பு, அமிலத்தன்மை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அதே போல டீயுடன் சமோசா, பக்கோடா மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவது ஆபத்தை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மற்றும் பொரித்த உணவுகளை டீயுடன் சேர்த்து சாப்பிடும் போது செரிமான அமைப்பை சீர்குலைத்து அஜீரணத்தை ஏற்படுத்தும். இதனால் நாள் முழுக்க மந்தமான, அசௌகரியத்தை ஏற்படுத்தும். டீயுடன் மட்டும் இல்லாது பொதுவாகவே எண்ணெய் மற்றும் வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது. பால் சேர்த்து டீ குடிப்பது பல்வேறு ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். பால் சேர்த்து டீ குடிப்பது பாலிபினால்களை நடுநிலையாக்கும். இது டீயில் உள்ள ஆக்ஸிஜனேற்ற நன்மைகளை குறைக்கிறது. பல ஆராய்ச்சிகளில், டீயில் பால் சேர்க்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் டீயுடன் உப்பு சேர்த்த உணவுகளை சாப்பிட கூடாது, இது உடலுக்கு உடனடியாக பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து அல்லது புரதம் கொண்ட உணவுகள் காஃபின் உறிஞ்சுதலை மெதுவாக்கும். இது அதிக பதற்றத்தை ஏற்படுத்தும். அதே போல டீ குடிக்கும் போது பிரட் ஆம்லேட் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக முட்டையை டீயுடன் சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே இதைச் செய்வதைத் தவிர்க்கவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ