Health Tips In Tamil: உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை அறிய முக்கிய விஷயங்களில் ஒன்று, சரியான நேரத்தில் பசி எடுப்பது எனலாம். நன்றாக பசி எடுத்து சாப்பிட்டால் அந்த உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் சரியான முறையில் உடலில் சேரும் என கூறுவார்கள். எனவே, காலை, மதியம், மாலை, இரவு என ஆரோக்கியமான, சமநிலையான ஊட்டச்சத்துகளை உடலுக்கு அளிக்கும் உணவுகளை சரியாக சாப்பிடுவதால் சரியான நேரத்திற்கு பசியெடுக்கும்.
அதே நேரத்தில் மன அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை மேற்கொண்டால் உங்களுக்கு பசியெடுக்காது. பசியெடுக்கவில்லை என்றால் சரியான நேரத்திற்கு உணவு செரிமானம் ஆகவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம். மேலும், சரியான நேரத்திற்கு சாப்பிடவில்லை என உடல் ஆரோக்கியமும் சீராக இருக்காது.
இது ஒருபுறம் இருக்க, சிலருக்கோ எவ்வளவு சாப்பிட்டாலும், சாப்பிட்ட உடனேயே பசியெடுக்கும்ய அதாவது உங்களின் வயிறே முழுமையாக நிரம்பினாலும் உங்களுக்கு அப்போதும் பசி எடுக்கும். இதுவும் உடல்நிலையில் சில பிரச்னைகள் இருப்பதால் நிகழ்கிறது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. அந்த வகையில் உங்களுக்கு சாப்பிட்ட பின்னரும் கொடூரமாக பசியெடுக்கிறது என்றால் இந்த 5 தவறுகளை செய்கிறீர்கள் என்று அர்த்தம் என பிரபல உணவியல் நிபுணரான மருத்துவர் ஆயுஷி யாதவ் கூறுகிறார். அந்த 5 தவறுகள் என்னென்ன என்பதையும், அதனை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் இங்கு காணலாம்.
மேலும் படிக்க | சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..
நீர்ச்சத்து
சாப்பிட்ட பின்னரும் உங்களுக்கு பசியெடுக்கிறது என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லையென்றால் இந்த உணர்வு ஏற்படும். எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் நீர் குடிக்க வேண்டும். சாப்பிடும்போது சிறு மிடறு தண்ணீர் அருந்தலாம்.
அதீத உடற்பயிற்சி
அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும் உடலுக்கு நிறைய கலோரிகள் தேவைப்படும். சரியான அளவில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். நீங்கள் சரியான அளவுக்கு கலோரிகளை உட்கொள்ளாவிட்டாலும் பசி எடுக்கும். உடலும் சோர்வாக உணரும்.
வேக வேகமாக சாப்பிடாதீர்கள்
அதேபோல் நன்றாக மென்று சாப்பிடாமல் வேக வேகமாக சாப்பிட்டாலும் விரைவாக பசியெடுக்கும். வேகமாக சாப்பிடுவது ஆரோக்கியமான பழக்கம் இல்லை. வாயில் உணவை நன்றாக சவைத்து, உமிழ்நீருடன் அதை கூழாக்கி அதை முழுங்கவும். இப்படி சாப்பிட்டாலும் உங்களுக்கு பசியெடுக்காது.
ரத்த சர்க்கரை அளவு
மேலும், அதிகமாக பசியெடுத்துக்கொண்டே இருந்தாலும் ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது எனலாம். எனவே உங்களின் ரத்த சர்க்கரை அளவு அடிக்கடி சீராக இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்ளவும்.
உணவில் இதை நோட் பண்ணுங்க
உங்களின் வயிறு நிறைய வேண்டும் என்றால் உங்களின் உணவில் புரதமும், நார்ச்சத்து சரியான அளவில் இருக்க வேண்டும். இது இருந்தால் தேவையில்லாத நேரத்தில் பசியெடுக்காது. எனவே, புரதமும், நார்ச்சத்தும் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். மதியமும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். பசியெடுத்தாலும் ஆரோக்கியமான ஸ்நாக்ஸை சாப்பிடுங்கள்.
பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுங்கள். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.
மேலும் படிக்க | முலாம்பழம் விதைகளில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? தூக்கி எறிந்து விடாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ