அனைத்து வகையான பருப்பு வகைகளையும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துகிறார்கள். பருப்பு வகைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், எடை கட்டுப்பாட்டை அடைவதுடன், வாயு பிரச்சனையும் நீங்கும். பாசிப்பருப்பால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாசிப்பருப்பை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்
பாசிப்பருப்பை உட்கொள்வது மன அழுத்தம் அல்லது மன இறுக்கம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த பருப்பை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலன்களைத் தரும்.
பாசிப்பருப்பின் பயன்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேலையை செய்கின்றன. எப்பொழுதெல்லாம் நீங்கள் பலவீனமாக உணர்கிறீர்களோ, அப்பொழுதெல்லாம் பாசிப்பருப்பை சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க |நிம்மதியான தூக்கம் வேண்டுமா; டின்னரில் ‘இவற்றை’ சேர்த்துக் கொள்ளுங்கள்..!!
பாசிப்பருப்பின் பயன்கள்: ஜீரண மண்டலத்தை வலிமையாக்கும்
ஜீரண மண்டலத்தை வலிமையாக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாசிப் பருப்பில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்த மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கோடை காலத்தில் இதை உட்கொண்டால், இது வயிற்றில் உள்ள சூட்டை நீக்க உதவுகிறது. இதை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பாசிப்பருப்பின் பயன்கள்: நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்
சர்க்கரை நோய் பிரச்சனை இருப்பவர்களுக்கு பாசிப்பருப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அதில் உள்ள அனைத்து குணங்களும் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
பாசிப்பருப்பின் பயன்கள்: எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தினமும் வெந்தயத்தை இப்படி சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR