சிறந்த சூப்பர்ஃபுட்கள்: குளிர்காலத்தில் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, உங்கள் உணவில் அதிகபட்ச கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். உங்கள் ஆரோக்கியத்தை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சில சூப்பர்ஃபுட்களை பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த சூப்பர்ஃபுட்களில் நமது உடலுக்கு நன்மை பயக்கும் வைட்டமின்கள் நிரம்பியுள்ளன. இவற்றின் தாக்கம் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தின் மீதும் இருக்கும். இவற்றை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம்.
உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அந்த சூப்பர் உணவு வகைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ நிறைந்துள்ளது. அதாவது நீரிழிவு இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க பப்பாளி உதவுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் உள்ள பெண்களுக்கு பப்பாளி சாறு சிறந்தது. ஏனெனில் மாதவிடாய் சுழற்சியை இது இயல்பாக்க உதவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு நல்ல ஆதாரமாகும்.
கற்றாழை
கற்றாழை தோல் பிரச்சனைகள், முகப்பரு, தழும்புகள் மற்றும் வெயிலுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. கற்றாழை ஜெல் தோலின் அமைப்பை மேம்படுத்துவதற்கும் மூப்பை தள்ளிப்போடுவதற்கும் ஒரு முழுமையான தயாரிப்பாகவும் பயன்படுத்தப்படலாம். கற்றாழை சாறு குடிப்பது மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது. இது தெளிவான தோல் மற்றும் செரிமான நன்மைகளை வழங்குகிறது.
மேலும் படிக்க | ஆரோக்கியத்தை மட்டுமல்ல கால்சியத்தையும் எலும்பையும் குலைக்கும் பழக்கங்கள்
தேங்காய்
தேங்காய் சமைப்பதற்கும், உணவின் சுவையை கூட்டுவதற்கும் மிகவும் உதவுகிறது. தேங்காய் எண்ணெய், பாடி லோஷன்கள், ஃபேஸ் க்ரீம்கள் ஆகியவற்றில் இருக்கும் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுத்தப்படும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இது உங்கள் உணவிலும் ஒரு அற்புதமான அம்சமாக விளங்குகின்றது.
ஆளிவிதை
இந்த சிறிய பழுப்பு விதைகள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் உள்ளடக்கம் உடலின் இயற்கையான எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது ஒரு சிறந்த சூப்பர்ஃபுட் ஆக இருக்கும்.
மேலும் இவற்றில் கொலஸ்ட்ரால் இருக்காது. எனவே உங்கள் இதயத்திற்கு இது மிகவும் நல்லது. கூந்தல் உதிர்தல் என்பது நாம் எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இந்த விதைகள் ஆரோக்கியமான கூந்தலை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக இருக்கின்றன.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 80/20 Rule: டயட்டில் இருந்தாலும் ருசியாக சாப்பிடலாம்... உடல் எடையை குறைக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ