புதுடெல்லி: உலக சுகாதார அமைப்பு, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையங்கள் மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகளிடமிருந்து COVID-19 பற்றிய தரவை JHU எனப்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரிக்கிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,18,46,595. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,44,536 என்றும், உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 64,63,941 என்றும் அண்மைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,42,417 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,56,831 ஆகவும், பலி எண்ணிக்கை 20,642 ஆகவும் உயர்ந்துவிட்டது.
அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்தைத் தாண்டியது.
ஆப்பிரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது.
COVID-19 நோய்த்தொற்று காற்றின் மூலமாகவும் பரவும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் ஒப்புக்கொண்டது
கொரோனா நோய்த்தொற்று தாக்கம் கொண்ட முதல் பத்து நாடுகளின் பட்டியல் இது-
1. அமெரிக்கா - 29,96,098
2. பிரேசில் - 16,68,589
3. இந்தியா - 7,42,417
4. ரஷ்யா - 6,93,215
5. பெரு - 3,09,278
6. சிலி - 3,01,019
7. இங்கிலாந்து - 2,87,874
8. மெக்சிகோ - 2,68,008
9. ஸ்பெயின் - 2,48,970
9. இத்தாலி - 2,52,130
10. இரான் - 2,45,688