மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ( Hardeep Singh Puri) தில்லியில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். அபோது அவர் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் பணி மே மாத இறுதியில் முடிவடைந்து விடும் என்றார்.
மேலும், “ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யும் பணி மே மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும். வரும் திங்கள்கிழமை முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. ஏர் இந்தியா விமானத்துக்கான விலை கோரியுள்ளவர்கள் பட்டியல் குறித்து அக்கூட்டத்தில் உறுதி செய்யப்படும். மேலும், பொதுத்துறை நிறுவனமான பவன் ஹன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும். தற்போது ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் இருக்கிறது” மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் என்று கூறினார்.
கொரோனா வைரஸ் (Corona Virus) பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில், விமானப் போக்குவரத்து குறைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், விமானப் போக்குவரத்து சேவையைக் குறைக்கும் திட்டம் ஏதும், மத்திய அரசுக்கு இல்லை. என தெளிவு படுத்தினார்.
ALSO READ | சட்ட விரோத குடியேறிகளின் தலைநகராக இந்தியா இருக்க முடியாது: மத்திய அரசு
விமானச் சேவையை, இயல்பு நிலைக்கு கொண்டு வந்து மீண்டும் போக்குவத்தை முழுமையாக இயக்கவே அரசு திட்டமிட்டு வருகிறது எனவும், இதற்கான நடவடிக்கைகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் எனவும் கூறினார்.
எனவே, விமானப் போக்குவரத்து சேவையைக் குறைக்கும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. தற்போது 80 சதவீத விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், இதை 100 சதவீதமாக பழைய நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம். இப்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், 100 சதவீதம் இயக்க முடியாது. ஆனாலும், படிப்படியாகச் விமான போக்குவரத்து சேவை அதிகரிக்கப்படும் என்றார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காத பயணிகளை கறுப்புப் பட்டியலில் வைக்கக் கோரி விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். எனவே, மாஸ்க் அணியாத பயணிகள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பயணிகள் விமானத்தில் பயணிக்கத் தகுதியற்றவர்கள் என்ற பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்'' என ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
ALSO READ| மீண்டும் லாக்டௌன், பதுங்கிப் பாயும் கொரோனா: 24 மணி நேரத்தில் 62,291 பேர் புதிதாக பாதிப்பு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR